’காக்கி சர்க்கஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

கிளைச்  சிறை ஒன்றில் ஜெயிலராக முனீஷ்காந்த் பணியாற்றி வருகிறார்.இந்த சிறைச்சாலையில் ஒரு நூலகம்  வைத்திருக்கிறார். அடிப்படையில் ஒரு எழுத்தாளரும்  கூட குற்றவாளிகளிடம் கடுமையாக நடந்து கொள்ளாமல் தான் எழுதிய புத்தகங்களை கொடுத்து படிக்க சொல்வதால் குற்றங்கள் குறையும் என்று நம்பக்கூடியவர் . இவருடன் காவலராக சுபாஷ் செல்வம் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் கண்ணகி கோவில் உண்டியலில் இருக்கும் பணம் திருட்டு போகிறது. சிறைச்சாலையில் திருடப்பட்ட சம்பவம் வெளியே தெரிவதற்குள் பணம் முன்பு இருந்த இடத்தில் வைக்க வேண்டிய கட்டாயத்திற்கு காவலர் சுபாஷ் செல்வம் ஆளாக்கப்படுகிறார்.வங்கியில் வேலைப் பார்க்கும் நாயகி வின்சு ரேச்சல் ஷாம் உதவியோடு கடன் பெற்று அந்த பணத்தை கோவில் உண்டியலில் போட முடிவு செய்கிறார்.
இதனையடுத்து வங்கியில் பெற்ற கடன் பணத்தை  தன் வீட்டில் வைத்திருக்க அங்கேயும் உண்டியல் திருடன் பணத்தை எடுத்து விடுகிறான்,இதே சமயம் சிறைச்சாலையில் இருந்த உண்டியல் பணம் காணாமல் போன தகவல் வெளியே தெரிய வருகிறது.
இறுதியில் உண்டியல் பணத்தை  திருடியது யார் காணாமல் போன பணத்தை சுபாஷ் செல்வம் கண்டுபிடித்தாரா இல்லையா நாயகி வின்சு ரேச்சல் ஷாமுடன் திருமணம் நடந்ததா இல்லையா என்பதே மீதிக்கதை.
ஜெயிலராக  நடித்திருக்கும் முனீஸ்காந்த் எதார்த்த நடிப்பால் கவர்கிறார்.கண்டிப்பு மிக்கவராக இல்லாமல் புத்தகம் படிப்பதன் மூலம் திருந்தி வாழ்வார்கள் இன்று நினைக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.
சிறை காவலராக நடித்திருக்கும் சுபாஷ் செல்வம் இயல்பாக நடித்திருக்கிறார். காதல், கடமை,ஆக்ஷன் என அனைத்திலும் அசத்தியிருக்கிறார். கண் முன்னே திருடன் இருந்ததும் அவனை ஆதாரத்தோடு பிடிக்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டுக்குரியது.
திருடனாக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன் எளிய மனிதராக வலம் வருகிறார்.இவர் திருடும் ஒவ்வொரு  காட்சிகளும் ரசிக்க முடிகிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் வின்சு ஷாம் மற்றும் திருடன் காதலியாக நடித்திருக்கும் கெளதமி ஆகியோர் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.
மற்றும் சாவித்ரி,அம்ருதா,அப்துல் லீ, மருதுபாண்டியன்,ராகேஷ்,உசர், விக்னேஷ்வர்,அருண்குமார் அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சேவியர் மற்றும் விபின் பாஸ்கர் இசையும்,நீரஜ் ரவி ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
கோவில் உண்டியல்,திருட்டு,காவலர் இவற்றை மைய கருவாக வைத்து சிறந்த திரைக்கதை அமைத்து நகைச்சுவை கலந்து இயக்கி இருக்கும் இயக்குநர் அமீன் பாரிப் அவர்களுக்கு பாராட்டுகள்.
’காக்கி சர்க்கஸ்’காமெடி கலாட்டா.