செல்வராகவன் மலையடி கிராமத்தில் 140 குடும்பங்களே வாழ்கிறார்கள்.இந்த கிராமத்தில் பதனீர் வியாபாரம் செய்கிற ஒரு விவசாயி.இந்த கிராமத்தின் மீது அரசாங்கத்தின் பார்வை ஓட்டு வாங்க மட்டுமே விழந்ததே தவிர,எந்த அடிப்படை வசதிகளையும் செய்து தரவில்லை.பக்கத்து ஊரில் நடுத்தர குடும்பத்தில் அண்ணனின் பராமரிப்பில் வாழந்துவரும் குஷி, செல்வராகவனை திருமணம் செய்து கொள்கிறார். மேல் வருனானத்துக்காக செல்வராகவன் ஒரு உணவகத்தை குஷி, கௌசல்யா ஆகியோரின் ஆலோசணையின்படி நடத்தி,நல்ல வருமானத்த்குடன் வாழ்கிறார்.ஆனால் அந்த கிராமத்தில் சில பெண்கள் மர்மமான முறையில் மரணம் அடைகிறார்கள்.சில பெண்கள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இந்த நிலையில் ஒருநாள் திடீரென அமுதா என்ற குழந்தை பிணமாக சாலையோரத்தில் கிடக்கிறது. இதைப்பார்த்த செல்வராகவன் மனம் உடைந்து போகிறார்.பிறகு ஓரிரு வாரங்களில் கழித்து கர்ப்பிணியாக இருக்கும் செல்வராகவனின் மனைவி குஷி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்கிறாள். இதற்கெல்லாம் யார் காரணம் என்று செல்வராகவனுக்கு தெரியவருகிறது. தெரிந்ததும் செல்வராகவன் செய்தது என்ன,ஏன் பெண்கள் இவ்வாறு இறந்து போகிறார்கள்,அரசாங்கம் அந்த கிராமத்தை கவனித்ததா, என்பதே படத்தின் மீதிக்கதை.
செல்வராகவன் தனது எதர்த்தமான நடிப்பால் ஸ்கோர் செய்துள்ளார்.
குஷி ரவி தனது சிறப்பான நடிப்பை கச்சிதமாக செய்துள்ளார்.
மற்றும் நீண்ட நாட்களுக்கு பிறகு கௌசல்யா,ஒய்.ஜி.மகேந்திரன்,மைம் கோபி,ஆர்.எஸ்.சதீஷ் ஆகியோர் அனைவரும் சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர்.
ரவிவர்ம் ஒளிப்பதிவும்,ஏ.ஆர்.ப்ரியனின் இசையும் கதைக்கு கூடுதல் பலம்.
மனிதனின் எதார்த்த வாழ்வியலை கையில் எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத்துக்கு பாராட்டுகள்.
“மனிதன் தெய்வமாகலாம்” எதார்த்தம் பாராட்டுக்குரியது.
