ஆட்டி விமர்சனம்

1970 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பழங்குடி மற்றும் தேயிலைத் தோட்ட மக்கள் வாழும்‘கோடை மலை’கிராமத்தில் எடக்காடு கிராமத்தைச் சேர்ந்த 18 வயது தைரியமான பழங்குடிப் பெண் அபி நட்சத்திரா.இவர் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் கல்வி கற்று தன் கிராமத்து குழந்தைகளும் படிக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறிய குடிசை அமைத்து பாடம் சொல்லித் தருகிறார்.இந்தச் சூழலில், அந்த எடக்காடு கிராமத்திற்குப் புதிய ஆசிரியராக மதுரையில் இருந்து வருகிறார் பிரவீன் பழனிசாமி.பழங்குடிப் பெண் அபிநட்சத்திராவை பார்த்ததும் அவர் மீது ஒரு காமக்கண்ணோட்டம் இருந்தது.ஒரு கட்டத்தில் எல்லையை மீறி அவரிடம் தவறாக நடக்க முயல்கிறார்.அபிநட்சத்திரா அவரை ஓங்கி கன்னத்தில் அறைகிறார். ஒரு பெண்ணிடம் அடி வாங்கியதை ஜீரணிக்க முடியாத ஆசிரியர் பிரவீன் பழனிசாமி ஆத்திரத்தில் பள்ளி மாணவர்களை கொடூரமாக தாக்குகிறார். ​ மறுநாள் காலை ஆசிரியர் செல்வம் தங்கியிருந்த வீட்டின் வாசலில் ரத்த வெள்ளத்தில் மர்மமான முறையில் பிணமாக கிடக்கிறார்.அதே நேரத்தில்,அந்தப் பகுதிக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் மாற்றம் பெற்று வருகிறார்.குற்றங்கள் நடக்காத அந்த அமைதியான மலைக் கிராமத்தில் நடந்த இந்த மர்மக் கொலையை இன்ஸ்பெக்டர் கையில் எடுக்கிறார்.தனது தீவிர விசாரணையை தொடங்குகிறார்.பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு,மதுரையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பதிவுகள் ஆராய்ச்சி செய்யும் போது ஒரு அதிர வைக்கும் உண்மை தெரியவருகிறது. தற்போது நடந்துள்ள ஆசிரியர் கொலைக்கும்,150 ஆண்டுகளுக்கு முன்பு பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க உருவான முகமூடி அணிந்த ஐந்து பெண்கள் கொண்ட ஒரு ரகசியக் குழுவிற்கும் தற்போது நடைபெற்ற கொலைகளுக்கும் ஒற்றுமை இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார்.இந்தத் தொடர் கொலைகளுக்கு பின்னால் இருக்கும் அந்த வரலாற்றுப் பின்னணி என்ன, கொலையாளி யார்,பெண்களுக்குப் பாதுகாப்பு ஆண்கள் கையில் இருக்கிறதா அல்லது பெண்களின் கைகளில் உள்ளதா என்பதே படத்தின் மீதிக்கதை.
இசக்கி கார்வண்ணன் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமைதிராஜாக ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
அபிநட்சத்திரா படத்தில் கிராமத்துப் பழங்குடிப் பெண்ணாக அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
மற்றும் பிரவீன் பழனிசாமி,
காதல் சுகுமார்,செல்வகுமார்
சௌந்தர்,குயிலி நாச்சியார்,உதயா சுமதி, நிலா,சுமித்ரா தேவி,ஆஷிகா,கரன் சக்ரவர்த்தி,ஆலன் கிருஷ்ணா,சித்து குமரேசன்,ஆனந்த் சௌந்தரராஜன்,நேசன் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிளர் சிபி சதாசிவம் அவர்களின் ஒளிப்பதிவும்,இசைமைப்பாளர் தீசன் அவர்களின் இசையும் படத்திற்கு பலம்.
1970-களின் மலைக் கிராமத்து வாழ்வியலையும், பழந்தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றையும் மிகத் தீவிரமாக ஆராய்ந்து இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது ஆண்கள் கையில் இல்லை பெண்களின் கைகளில்தான் உள்ளது என்ற மிக அழுத்தமான திரைக்கதை அமைத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கான லீடோடு முடித்து இயக்கி இருக்கும் இயக்குநர் கிட்டு அவர்களுக்கு பாராட்டுகள்.
ஆட்டி அழுத்தமானது.