‘‘நூறு சாமி’ ’ விமர்சனம்

ஸ்வாசிகா,கணவரை இழந்தவர் தனது இரண்டு மகன்களை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறார். மறுமணம் செய்ய ஆசைப்படும் ஸ்வாசிகா,தனது எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் கூற அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கிருந்து சென்று விடுகிறார்.
சில வருடம் கடந்த நிலையில் தன் அம்மாவின் விருப்பத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான் அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.அவரது முடிவுக்கு அவரது இளைய சகோதரர் சக்தி ஆதரவு தெரிவிக்க,இரண்டு மகன்களும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க  நினைக்கிறார்கள்.இதற்கு சொந்தமும்,ஊர் மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் அண்ணன் கருணாஸ் தங்கை ஸ்வாசிகாவை கொலை செய்ய முயற்சிக்கிறார்.இறுதியில் கருணாஸிடம் இருந்து ஸ்வாசிகா உயிர் பிழைத்தாரா இல்லையா  மகன்கள் ஊர் எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
செல்வி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்வாசிகா இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார்.
முக்கிய கதாபாத்திரத்தில் வரும் விஜய் ஆண்டனி படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவான நடிப்பால் அனைவரின் மனதிலும் தனி இடத்தை பிடித்து ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும் அஜய் திஷான்,சக்தி,பாடினி குமார், காவ்யா அனில்,கருணாஸ்,லிஜோமோல், பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ், முனீஷ்காந்த்,ஜென்சன் திவாகர்,பக்ஸ், வினோதினி என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் இசையும்,எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ்  ஒளிப்பதிவும் கதைக்கு பலம.
2017 ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், வளையாம்பட்டு  கிராமத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மைய கருவாக எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து விதவை பெண்கள் சமூகத்தில் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகளை சொல்லி விதவை பெண்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லியிருக்கும் இயக்குனர் சசி அவர்களுக்கு பாராட்டுக்கள்.
‘நூறு சாமி’அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய எதார்த்தம்.