“மம்முட்டியான் ஸ்டார்ஸ்” விமர்சனம்

வைபவ் முருகேசன் தான் வாழும் கிராமத்தில் “மம்முட்டியான் ஸ்டோர்ஸ்” என்ற கிரிக்கெட் பந்தாட்ட அணியின் தலைவராக இருந்து கிராமத்தில் நடக்கும் கோயில் திருவிழாக்களில் நடக்கும் கிரிக்கெட் பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்கிறார்.இவரது அணியிலுள்ள வெங்கட பாலமுரளி,ஜகபர் சாதிக்,கிரிக்கெட் ரசிகையாக இருக்கும் லாவண்யா ஆகிய நால்வரும் “தல” என்று அழைக்கப்படும் கிரிக்கெட் வீரர் டோனியின் பரம ரசிகர்களாக இருக்கிறார்கள்.சென்னையில் நடக்கவிருக்கும் ‘தல’யின் கடைசி மேட்சை நேரில் கண்டு களிக்க சென்னைக்கு செல்ல திட்டமிடுகிறார்கள். டிக்கெட் வாங்க பணமில்லாததால் மொட்டை ராஜேந்திரனின் அலுவலகத்திலிருந்து ரூ.40 ஆயிரத்தை திருடிக் கொண்டு நால்வரும் சென்னைக்கு செல்கிறார்கள். ஆனால் விளையாட்டுப் போட்டியின் டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துவிட்டதால் வெளியில் ரூ.40 ஆயிரத்தையும் கொடுத்து 4 டிக்கெட்களை வாங்கி மைதானத்துக்குள் செல்கிறார்கள். மைதான நுழைவு வாயிலில் அந்த 4 டிக்கெட்களும் போலியானது என்று கண்டுபிடிக்கப்படுகிறது.அதனால் நால்வரும் வெளியேற்றப்படுகிறார்கள்.ஆனாலும் கிரிக்கெட் போட்டியை நேரில் பார்த்த பிறகுதான் கிராமத்துக்கு செல்ல வேண்டும் என்பதில் நான்கு பேரும் உறுதியாக இருந்து டிக்கெட்டுக்கு பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள்.பணம் சம்பாத்கிக்க என்னென்ன வேலைகள் செய்தார்கள் பணம் கிடைத்ததா இல்லையா இறுதியில் கிரிக்கெட் போட்டியை கண்டு களித்தார்களா இல்லையா என்பதே மீதிக்கதை.
வைபவ்முருகேசன் கிராமத்தில் நடக்கும் கிரிக்கெட் பந்தாட்ட வீரராகவே திரையில் வாழ்ந்திருக்கிறார்.
மற்றும் வெங்கட பாலமுரளி,ஜகபர் சாதிக், லாவண்யா,மொட்டை ராஜேந்திரன்,விவேக்பிரசன்னா,சம்பத் ராம் ஆகிய அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
பி.எம்.ராஜ்குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு பெரிய பலம்.
கிரிக்கெட் வீரர்களின் மீது வெறித்தனமான பிரியம் வைப்பதிலிருந்து இளஞர்கள் மீளவேண்டுமென்பதை மையக்கருவாக வைத்து இதனால் இளைஞர்கள் சூதாட்டத்துக்குள் எப்படி தள்ளப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டி சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குனர் சவிர் சுதாகர் அவர்களுக்கு பாராட்டுகள்.
“மம்முட்டியான் ஸ்டார்ஸ்”அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.