டார்க் விமர்சனம்

முன்னாள் அரசு அதிகாரி கே.பாக்யராஜ் அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கியிருந்த மூன்று இளைஞர்களில் ஒருவர் திடீரென மற்ற இருவரையும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த வீட்டை மர்மமும் அச்சமும் நிறைந்த இடமாக மாற்றுகிறது. அந்த வீட்டுக்குள் யாரும் செல்ல தயங்கும் சூழலில்,குறைந்த வாடகை என்ற ஒரே காரணத்திற்காக எந்த பயமும் இல்லாமல் அங்கு குடியேறுகிறார் நாயகன் அஜய் கார்த்தி ஆரம்பத்தில் சாதாரணமாகத் தோன்றும் வாழ்க்கை நாட்கள் செல்லச் செல்ல அமானுஷ்ய அனுபவங்கள் அவரை உளவியல் ரீதியாக சிதைக்கத் தொடங்குகிறது.அவர் காண்பது பிரமையா அல்லது உண்மையா என்ற குழப்பம் அதிகரிக்கும் வேளையில் வீட்டின் உரிமையாளர் கே.பாக்யராஜ் மர்மமான முறையில் உயிரிழந்து கிடக்கிறார்.அருகில் உடலெங்கும் கொடூரமான காயங்களுடன் அஜய் கார்த்தி மயங்கிக் கிடக்கிறார்.சம்பவ இடத்திற்கு வரும் காவல்துறை துணை ஆணையர் நட்டி,உயிரிழந்துவிட்டதாக நினைத்த அஜய் திடீரென கண் விழித்து தனது பெயரைச் சொல்லி எச்சரித்துவிட்டு மீண்டும் மயங்கிச் சரிவதைக் கண்டு அதிர்ச்சி அடைகிறார்.இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அஜயை மையமாகக் கொண்டு விசாரணையை தீவிரப்படுத்தும் நட்டி தனக்குத் தெரியாத ஒருவர் தனது பெயரை எப்படி தெரிந்து கொண்டார்,அந்த வீட்டில் தொடர்ச்சியாக நடந்த கொடூர மரணங்களின் உண்மையான பின்னணி என்ன, அஜயை துரத்திய அமானுஷ்ய அனுபவங்கள் உண்மையா அல்லது மனித மனதின் உளவியல் விளையாட்டா என்ற கேள்விகளுக்கான பதில்களை தேடிச் செல்கிறார்.அந்த வீட்டில் நடந்த கொடூர மரணங்கள் பின்னணி என்ன அஜய் கார்த்தி எதிர்கொண்ட அமானுஷ்யங்கள் உண்மை என்ன என்பதே மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அஜய் கார்த்தி மன ரீதியாக பாதிக்கப்பட்ட இடங்களில் தனது அசாத்திய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
அஞ்சனா நேத்ரன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் நட்டி,கே.பாக்யராஜ்,விடிவி கணேஷ்,இந்துமதி மணிகண்டன்,சிபி சக்கரவர்த்தி,சாகுல் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி சக்தியின் ஒளிப்பதிவும்,மனு ரமேஷின் இசையும் கதைக்கு பலம்.
வழக்கமான பேய் படங்களின் பாதையில் செல்லாமல்,உளவியல் திகிலையும் அமானுஷ்ய அம்சங்களையும் சமநிலையுடன் கையில் எடுத்து சிறந்த திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குனர் கல்யாண் கே.ஜெகன் அவர்களுக்கு பாராட்டுகள்.
டார்க் விறுவிறுப்பான சைக்காலஜிக்கல் த்ரில்லர்.