Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் ‘Scam 2010’ விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது.

Birla Studios & Applause Entertainment தயாரிப்பில், இயக்குநர் ஹன்சல் மேத்தாவின் ‘Scam 2010’ விரைவில் Sony LIV-ல் வரவுள்ளது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பாராட்டப்பட்ட தொடர்களில் ஒன்றான Scam Franchises அடுத்த அத்தியாயம் அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருக்கிறது.Sony LIV, Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து Scam 2010 தொடரின் தயாரிப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

தேசிய விருது பெற்ற இயக்குநர் ஹன்சல் மேத்தா இத்தொடரை இயக்குகிறார்.

சிறு சேமிப்பு திட்டங்கள் மூலம் தனது பயணத்தைத் தொடங்கி பின்னர் மிகப்பெரிய நிதி சமராஜ்ஜியத்தை Create செய்து ஒரு மனிதரின் எழுச்சி முதல் அதன் மூலமாக அவர் எதிர்கொண்ட விமர்சனங்ககள் போன்றவற்றையும் வாழ்க்கைப் பயணத்தை சுவாரஸ்யமாகப் பதிவு செய்கிறது இத்தொடர்.

 

இத்தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில்..,
“Scam 2010 என்பது லட்சியம், செல்வாக்கு மற்றும் அந்த இரண்டிலிருந்தும் உருவாகும் ஆணவம் பற்றிய கதை.இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்யங்களில் ஒன்று எவ்வாறு நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டு அமைந்தது என்பதையும் அந்த நம்பிக்கை ஒருகட்டத்தில் சிதறிய போது என்ன நடந்தது என்பதையும் இந்தத் தொடர் பேசுகிறது.

இந்த கதை எழுச்சியையும், அதை உருவாக்கிய மனிதர் அதுவே ஒருபோதும் வீழாதது என நம்பியதையும் மிகவும் சுவாரசியமாக சொல்லும் கதை இது,” என்றார்.

Applause Entertainment நிறுவனத்தின் Chief Content Officer Deepak Segal கூறுகையில்..,Scam எங்களைப் பொறுத்தவரை ஒரு தொடரைத் தாண்டி மிகப்பெரிய Franchise – ஆக மாறியிருக்கின்றது.Scam தொடரின் வெற்றி எங்களிடம் மிகப்பெரிய பொறுப்பையும் கொண்டு வந்துள்ளது. மக்கள் எதிர்பார்க்கும் தரத்தை நாங்கள் முழுமையாக உணர்ந்திருக்கிறோம்.

இந்தியாவின் Streaming துறை இன்னும் தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் Scam 1992 வெளியானது..அது இந்தியாவில் உருவான மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் கலாச்சார ரீதியாக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தொடர்களில் ஒன்றாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

Scam 1992 பெற்ற வெற்றிதான் ஒரு வலுவான சிந்தனையை அடிப்படையாய் கொண்டு இந்தத் தொடரை ஒரு Anthology-ஆக விரிவுபடுத்தும் நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது. இந்தியாவின் வரலாற்றில் லட்சியம், பணம், அதிகாரம் மற்றும் மனித இயல்பு ஒன்றுடன் ஒன்று மோதும் ஏராளமான அசாதாரணக் கதைகள் உள்ளது..Scam 2010 மூலம் அந்த லட்சியத்தை இன்னும் ஒரு படி அதிகமாக உயர்த்துகிறோம்…ஹன்சல் மேத்தா மீண்டும் இயக்குநராக இணைந்திருப்பது இந்த சீசனுக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது, Scam தொடரின் முக்கிய அங்கமாக இருந்தவர் ஹன்சல்.

சிரமமான நிஜ சம்பவங்களை நெருங்கிய வகையில் சொல்லவும், பரபரப்பான மனிதர்களின் கதைகளாக மாற்றும் அவரது திறமைதான் இந்த Franchise மக்களிடம் இவ்வளவு ஆழமாகப் பதிய முக்கிய காரணங்களில் ஒன்று என்றுள்ளார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் Siddharth Bodke பேசுகையில்,
இந்த கதாபாத்திரத்தின் சிக்கலான தன்மையும், பிரம்மாண்டமான Scale தான் முதலில் என்னை மிகவும் கவர்ந்தது.அவரது ஆர்வம் அதிகாரம்,எழுச்சி மற்றும் வீழ்ச்சி என அனைத்துமே இந்த கதாபாத்திரத்தை மிகவும் விருவிருப்பாக காண்பிக்கிறது.இப்படி பல பரிணாமங்களை கொண்டுள்ள கதாபாத்திரத்தை ஹன்சல் மேத்தா போன்ற இயக்குநரின் வழிகாட்டுதலின் படி நடிப்பது எனக்கு மிகுந்த உற்சாகமான அனுபவம்.இந்த வாய்ப்பை நான் முழுமையாக ரசித்து வருகிறேன் என்றார் Siddharth Bodke..

 

 

Birla Studios மற்றும் Applause Entertainment இணைந்து தயாரிக்கும் இந்த Scam 2010 தற்போது தயாரிப்பில் இருக்கின்றது. இந்த தொடர் விரைவில் Sony LIV தளத்தில் Exclusive – ஆக வெளியாக உள்ளது.