கோல்ட் கால் விமர்சனம்

சித்துமூலிமணி,சந்தோஷ்,ஸ்ரீவைஷ்ணவ் கிருஷ்ணா,விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் நண்பர்களான இவர்கள் பெங்களூரில் ஒரு நிறுவனத்தில் விற்பனை முகவர்களாக இருக்கிறார்கள்.வேலை செய்யாமல் ஜாலியாக ஊர்சுற்றிக் கொண்டு சமாளிக்கிறார்கள். இதை அறிந்த அந்நிறுவனம் அவர்களை வேலையிலிருந்து நீக்கிவிடுகிறது.அதே நேரத்தில் ஒரு கடத்தல் சம்பவத்தில் நண்பர்களான இவர்கள் சிக்கிக் கொள்ள அதிலிருந்து அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதுதான் மீதிக்கதை கதை.
சித்து மூலிமணி,சந்தோஷ்,ஸ்ரீ வைஷ்ணவ் கிருஷ்ணா,விஜய்,பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோர் சிறப்பான இயல்பான நடிப்பை நகைச்சுவை கலந்த வழங்கி நடித்துள்ளனர்.
மற்றும் நிஷா ஹெக்டே,மேரி லிட்டி,அமிதா ரங்கநாதா,கீர்த்தனா புல்கி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
சரவணனின் ஒளிப்பதிவும் பிரணவ் கிரிதரனின் இசையும் கதைக்கு பலம்.
வேலை செய்யாமல் சமாளிப்பவர்களின் நிலை என்னவாகும் என்பதை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் தம்பிதுரை அவர்களுக்கு பாராட்டுகள்.
கோல்ட் கால்” அனைவரும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை நிறைந்தது.