​தி பாரடைஸ் ​ விமர்சனம்

நானி சுதந்திரத்திற்குப் பிறகும் அடிப்படை குடியுரிமை, அடையாளச் சான்று மற்றும் மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, குப்பை மேடுகளுக்கு நடுவே ஒடுக்கப்பட்டு வாழும்‘சவாரி’என்ற பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் அந்தப் பகுதியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மோகன் பாபு மற்றும் அவரது மகன் ராகவ் ஜூயல் ஆகிய இவர்கள் இருவரும் இச்சமூக மக்களை கொத்தடிமைகளாகவும் சாராயம் காய்ச்சவும் தங்களின் சுயநலத்திற்குப் பயன்படுத்தும் கருவிகளாகவும் நடத்துகின்றனர்.சிறுவயதிலேயே நானியின் பிறப்பைச் சந்தேகித்து அவன் தாய் சோனாலி குல்கர்னி முன்னிலையில் மோகன் பாபு செய்யும் அவமானமும், அநீதியும் நானியின் மனதில் ஆறாத வடுக்களாக மாறுகின்றன.சிறுவயதிலேயே மோகன் பாபுவின் அத்துமீறலை எதிர்த்து நிற்கும் இவர் அவமானப்படுத்தப்பட்டு, கையில் தாய் குறித்து ஆபாசமாக பச்சை குத்தப்பட்டு விரட்டப்பட ஒரு மோதலில் மோகன் பாபுவின் கூட்டாளியை கொல்ல நானி 14 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுகிறார்.சிறை தண்டனை முடிந்து திரும்பும் நானி,ஆரம்பத்தில் தன் மக்களுக்காக அமைதியாக வாழ நினைத்தாலும்,மோகன் பாபுவின் குடும்பத்தின் தொடர் கொடூரங்கள் அவரை ஆயுதம் ஏந்த வைக்கின்றன.தாய் மீது வெறுப்பில் இருக்கும் நானி அதன் பின் தன் தாய் அனுபவித்த கொடுமையை கேள்விப்பட்டு மனந்திருந்துகிறார்.வெறும் தனிப்பட்ட பழிவாங்கல் கதையாகத் தொடங்கும் இத்திரைப்படம், பின்னர் நானியின் தலைமையில் அந்தச் சவாரி சமூகமே தங்களது அடிப்படை குடியுரிமைக்காகவும், மனித கண்ணியத்திற்காகவும் அரசையும் நிலப்பிரபுத்துவ முறையையும் எதிர்த்து தங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல் கட்சியின் துணையோடு நடத்தும் மிகப்பெரிய புரட்சியாகவும் மாறுவதே மீதிக்கதை.
நானி முற்றிலும் புதிய அவதாரம் எடுத்து நடித்துள்ளார்.
காயடு லோஹர்,மோகன் பாபு,ராகவ் ஜூயல்,சோனாலி குல்கர்னி,சம்பூர்ணேஷ் பாபு,தனிகெல்லா பரணி​,ஈஸ்வரி ராவ், கீர்த்தி சுரேஷ் (சிறப்புத் தோற்றம்) மற்றும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அனிருத் ரவிச்சந்தர் இசையும். சி.எச். சாய்.அவர்களின் ஒளிப்பதிவும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு சிறந்த கதையை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா அவர்களுக்கு பாராட்டுகள்.
​
தி பாரடைஸ் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர்.