ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – விஷால் வெங்கட் இயக்கத்தில்

*ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு*

*ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – விஷால் வெங்கட் இயக்கத்தில்*

நாசர்- ரெஜினா கஸாண்ட்ரா- ரமேஷ் திலக் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு காணொளி வெளியீடு.

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரும், நடிகருமான லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும்….. தொடர்ந்து வெற்றி படங்களை தமிழிலும் தயாரிக்கும் இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இப்படத்தின் டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டு உற்சாகத்துடன் அறிவித்துள்ளது.‌

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ ‘பாம்- Bomb’ படத்தை இயக்கிய இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகி வரும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தில் நாசர்- ரெஜினா கசாண்ட்ரா – ரமேஷ் திலக்- ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ். கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு *ஹெஷாம் அப்துல் வஹாப்* இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி. கே. பிரசன்னா மேற்கொள்கிறார்.

ட்ராமா திரில்லராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் லோகேஷ் கனகராஜ்- நவீன் யெர்னேனி & ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் படத்தை பற்றிய அறிவிப்பை படக்குழு பிரத்யேக காணொளியாக வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் மற்றும் ‘குட் பேட் அக்லி’, ‘டியூட்’, ‘மொத ராத்திரி’ ஆகிய வெற்றி பெற்ற படங்களை தொடர்ந்து மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் புதிய கூட்டணி – இயக்குநர் விஷால் வெங்கட் – நாசர் – ரெஜினா கசாண்ட்ரா- ரமேஷ் திலக் ஆகியோர் ஒன்றிணைந்திருப்பதால்….. இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் அதிகரித்திருக்கிறது. மேலும் படத்தின் டைட்டில் அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.