“சிக்மா” விமர்சனம்

நாயகன் சந்தீப் கிஷன் மறைந்த தன் தாயின் நினைவாக இருக்கும் ஒரே குடும்பச் சொத்தான பழமையான நூலகம் ஒன்றை சிரமப்பட்டு நடத்தி வருகிறார்.இதனால் கடன் சுமை ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் ஏறிவிட அதனை உடனடியாக அடைக்க வேண்டிய கடுமையான நெருக்கடி அவருக்கு ஏற்படுகிறது.இந்தச் சூழ்நிலையில் பிரபல எஃப்.எம் ரேடியோவில் ஆர்.ஜே-வாக பணியாற்றும் ஃபரியா அப்துல்லா சந்தீப் கிஷன் வாழ்க்கையில் நுழைகிறாள.அவர் அந்த நூலகத்தின் மீது வைத்துள்ள பாசத்தையும் அதை இழக்க கூடாது என்ற அவரது தவிப்பையும் புரிந்துகொள்ளும் ஃபரியா அப்துல்லா அவருக்கு உறுதுணையாக நிற்கிறாள்.நூலகத்தைக் காப்பாற்றத் தன் நண்பர்களான டாக்டர் ராஜு சுந்தரம் மற்றும் அன்புதாசன் ஆகியோருடன் இணைந்து புத்தகங்கள் பற்றிய சேனல் ஒன்றை தொடங்கி பணம் சம்பாதிக்க முயல்கிறார்.அதே வேளையில் 1,000 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தை சுரங்கப் பாதுகாப்புப் பெட்டகத்தில் பூட்டி வைத்திருக்கும் போதைப்பொருள் கடத்தல் ஆசாமி சம்பத் ராஜ் ஒருபுறமும் திரையரங்கம் என்ற போர்வையில் சட்டவிரோத சூதாட்ட கிளப் நடத்தும் ஷிவ் பண்டிட் மறுபுறமும் என மாஃபியா உலகம் இயங்குகிறது.இந்த இரண்டு சாம்ராஜ்யங்களுக்கும் இடையே பாலமாக செயல்படும் கிரண் என்பவன் திடீரெனக் காணாமல் போகிறான்.அந்த 1,000 கோடி ரூபாய் பெட்டகத்துக்கு இரண்டு சாவிகள் தேவை – ஒன்று சம்பத்திடம் உள்ளது, மற்றொன்று கிரனிடம் உள்ளது. எதிர்பாராதவிதமாக, மிரட்டலான வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவ் மற்றும் அந்தப் பாதுகாப்பு பெட்டகத்திற்கான இரண்டாவது சாவி என அனைத்துமே சந்தீப் கிஷன் கைகளில் வந்து விழுகின்றன.கடன் சுமையின் விளிம்பில் இருக்கும் சந்தீப் கிஷன் அவரது நண்பர்களும், இந்த அபாயகரமான மாஃபியா சாம்ராஜ்யத்தின் நடுவே இறங்கி அந்த 1,000 கோடி ரூபாயைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினார்களா காணாமல் போன கிரண் பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் ரகசியமும், நிழல் உலக கூலிப்படை கொலையாளியின் உண்மையான பின்னணியும் என்ன ஃபரியா அப்துல்லா தனது ஆர்.ஜே புத்திசாலித்தனத்தையும் ரேடியோ நெட்வொர்க்கையும் பயன்படுத்தி சந்திப்பின் ஆபத்தான ஹெய்ஸ்ட் பிளானுக்கு எவ்வாறு உதவினாள் புத்திசாலித்தனமான ஹெய்ஸ்ட் பிளான் மூலம் சந்திப் வெற்றி பெற்றாரா அல்லது இந்த டேஞ்சர் நெட்வொர்க்கில் சிக்கிச் சின்னப்பின்னமானாரா என்பதே படத்தின் மீதிக்கதை.
சந்தீப் கிஷன் கதையின் தீவிரத்தை உணர்ந்து தனது சுறுசுறுப்பான செயல்பாடுகள் மூலம் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ஃபரியா அப்துல்லா.காதல் மற்றும் உரையாடல் காட்சிகளில் தனது துடிப்பான நடிப்பு வழங்கி நடித்துள்ளார்.
மற்றும் ராஜு சுந்தரம்,சம்பத் ராஜ்,ஷிவ் பண்டிட்,அன்புதாசன்,யோக் ஜாபி,ஷீலா ராஜ்குமார்,மகாலட்சுமி சுதர்சனன்,கமலேஷ் ஜெகன்​,கிரண் கொண்டா,நாகா சாய் என அனைவரும் சிறப்பாக நடித்து ஸ்கோர் செய்துள்ளனர்.
இசையமைப்பாளர் தமன் எஸ் இசையும்,ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த்தின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
தனது முதல் முயற்சியிலேயே மிகவும் பிரம்மாண்டமான ஹெய்ஸ்ட் ஆக்ஷன் கிரைம் களத்தைத் கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை உருவாக்கி படத்தை விறுவிறுப்பாக இயக்கி இருக்கும் இயக்குனர் ஜேசன் சஞ்சய்க்கு பாராட்டுகள், வாழ்த்துக்கள்.
சிக்மா சிறப்பு.