“டோன் ட்ரபுள் தி ட்ரபுள்” விமர்சனம்

ஃபஹத் பாசில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்க்கிறார்.நேர்மையாக வாழ்ந்த வரும் இவருக்கு 25 லட்ச ரூபாய் கடன் இருக்கிறது. கடன் கொடுத்தவர்கள் ஃபஹத் பாசிலுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். கடனை அடைக்க ஒரு பணக்கார வீட்டுப்பிள்ளையைகடத்தி அப்பிள்ளையின் பெற்றோரை மிரட்டி பணம் பறிக்க எண்ணுகிறார்.அதன்படி சாரா என்ற சிறுமியை கடத்தி ஒரு அறையில் அடைத்து வைக்கிறார். உண்மையில் அந்த சிறுமி இவரிடம் மாட்டவில்லை. ஃபஹத் பாசில்தான் அந்த சிறுமியிடம் மாட்டிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.அப்படியென்றால் அந்த சிறுமி யார் அந்த சிறுமியிடமிருந்து ஃபஹத் பாசில் தப்பித்தாரா இல்லையா. என்பதே படத்தின் மீதிக்கதை.
ஃபஹத் பாசலின் எதார்த்தமான நடிப்பு அனைவரையும் கவர்ந்து விடுகிறது.
மற்றும் சாரா பாலேகர்,மகேஷ் மஞ்ரேகர், சௌரப் சச்தேவா,வெங்கடேஷ் காகுமானு, சுப்பராஜூ,திவ்யா பிள்ளை, எஸ்.எஸ்.ஷஷாங்க் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
கால பைரவாவின் இசையும்,பிராட் பிரான்ஸிஸின் ஒளிப்பதிவும் சிறப்பு.
இப்படி ஒரு வித்தியாசமான கதையை சுவாரசியமாக இயக்கி இருக்கும் இயக்குனர் ஷஷாங் யேலேட்டி அவர்களுக்கு பாராட்டுகள்.
“டோன் ட்ரபுள் தி ட்ரபுள்”அனைவரும் ரசிக்கலாம்.