“பத்தா” விமர்சனம்

நாயகன் விஜய் சேதுபதி சாராயம் காய்ச்சி விற்பனை செய்யும் தாதாவாக இருக்கிறார். தனக்கு எதிராக செய்ல்படும் எதிர் வீட்டுகாரர் அர்ஜூன் சிதம்பரத்தை அடித்து கையை ஒடித்து விடுகிறார்.இதை அங்கே இருக்கும் சாய் பிரித்வி ராஜ் என்ற சிறுவன் பார்த்து பயந்து நடுங்குகிறான்.விஜய் சேதுபதியை பார்த்தாலே ஊர்மக்கள் அனைரும் பயந்து நடுங்குவார்கள். இப்படியிருக்கும்போது ஒருநாள் விஜய் சேதுபதி அவ்வூரில் உள்ள பள்ளியின் கழிப்பறைக்கு செல்கிறார்.அப்போது வெளியிலிருந்து ஒருவன் கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுவிட்டு ஒடிவிடுகிறான்.பள்ளி இரண்டு வாரம் விடுமுறை என்பதால் கதவை யாரும் திறக்கவில்லை.கதவை உடைத்து வெளியே வர எவ்வளவோ முயற்சி செய்தும் விஜய் சேதுபதியாலும் வெளியே முடியவில்லை.8 நாட்கள் வெளியே வரமுடியாமல் கழிவறைக்குள்ளேயே தவிக்கும் விஜய் சேதுபதி முடிவில் என்ன ஆனார் கழிப்பறை கதவை யார் வெளிப்பக்கமாக பூட்டியது என்பதே படத்தின் மீதிக்கதை.
விஜய் சேதுபதி தனது இயல்பான நடிப்பால் பார்வையாளர்களின் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
லிஜோமோல் ஜோஸ் தனது எதார்த்த நடிப்பில் அனைவரையும் வியக்க வைத்துவிடுகிறார்.
மற்றும் சாய் பிரித்வி ராஜ்,சஹஸ்ரா, அர்ஜூன் சிதம்பரம்,ஹரிகிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர்,விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவுவும், சாய் அபயங்கரின் இசையும் கதைக்கு பெரிய பலம்.
அடிதடி வாழ்க்கையல்ல,அன்பு ஒன்றுதான் வாழ்க்கை என்னும் மையக்கருவை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை உருவாக்கி இயக்கி இருக்கும் இயக்குனர் பாலாஜி தரணிதரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
“பத்தா”அன்பு,பாசம் நிறைந்த அனைவரும் ரசிக்க கூடியவன்.