ரஜினிகாந்த் கோவையிலுள்ள ஒரு பலபொருள் விற்பனை அங்காடியில் மேற்பார்வையாளாராக வேலை பார்க்கிறார்.கோவாவிலிருந்து கொண்டு உலகளவில் சிலை கடத்தல் தொழிலை செய்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. எஸ்.ஜே.சூரியாவால் கடத்தப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் மதிபுள்ள பழங்காலத்து சாமி சிலைகள் உள்ள மூன்று கண்டெய்ணர் லாரிகளை ரஜினிகாந்த் கைப்பற்றி மறைத்து வைத்திருக்கிறார்.ஜெயிலர் முதல் பாகத்தின் இறுதிக்கட்ட காட்சியில் விநாயகத்தை வீழ்த்திய ரஜினிகாந்திடம் எனக்குப் பின்னால் ஒரு மிகப் பெரிய கொள்ளைக்கூட்டதின் தலைமை இருக்கிறது. அதிலிருந்து நீ தப்ப முடியாது என்று விநாயகம் சொல்லி இறந்து விடுகிறார். அந்த கொள்ளைக்கூட்ட தலைமையிடம் எது அதன் தலைவர் யார். என்பதை ரஜினிகாந்த் கண்டுபிடித்து அழித்தாரா இல்லையா எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து கைப்பற்றிய மூன்று கண்டெய்னர் லாரிகள் என்னவாயிற்று அந்த சிலைகளை எஸ்.ஜே.சூர்யா மீட்டெடுத்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.
ரஜினிகாந்த் அமைதியாகவும்,நின்ற இடத்தில் நின்று கொண்டே அலட்டிக் கொள்ளாமலும் கண் அசைவு சைகைகள் மூலமாகவும் துண்டு துண்டாக பேசும் வசனங்களாலும் தனது அனுபவம் வாய்ந்த முதர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இயல்பாக நடித்துள்ளார்.
மற்றும் எஸ்.ஏ.சூர்யா,சுராஜ் வெஞ்சரமூடு, மிதுன் சக்ரவர்த்தி,வித்யா பாலன்,ரம்யா கிருஷ்ணன்,யோகி பாபு.நமோ நாராயணா, பி.எல்.தேனப்பன்,ஜாபர் சாதிக்,பகவதி பெருமாள்,கோட்டயம் நசீர்,சுனில் சுகதா, ஹக்கீம் ஷாஜஹான்,வினீத் தட்டில் டேவிட், ராமச்சந்திரன் துரைராஜ் மற்றும் சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால்,சிவராஜ்குமார்,ஜாக்கி ஷெராஃப்,பூர்ணா,ராஜேஷ் மாதவன்,நோரா ஃபதேஹி ஆகியோர் கதைக்கு சிறந்த தேர்வாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக நடித்துள்ளனர்.
அனிருத் இசையும்,விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவும் கதைக்கு மிகப்பெரிய பலம்.
படத்தின் முதல் பகுதிக்கும் இரண்டாம் பாதிக்கும் தொய்வில்லாமல் சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இடைவேலைக்கு முன்பும் பின்பும் சலிப்பத்தட்டாமல் படத்தை பார்த்து அனைவரும் ரசிக்கும் வகையில் இயக்கி இருக்கும் இயக்குநர் நெல்சன் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘ஜெயிலர் 2’ரசிகர்கள் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பினரும் ரசிக்கலாம்.
Get real time updates directly on you device, subscribe now.
Next Post