
காத்துவாக்குல 2 காதல் விமர்சனம்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்துள்ள திரைப்படம்.
பிறக்கும்போதே அப்பாவை இழந்து விடுகிறார் விஜய் சேதுபதி. அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். அம்மாவைப் பார்க்கப் போனால் அவரது உடல் நிலை இன்னும் மோசமாகிறது. இப்படி அதிர்ஷ்டம் இல்லாத ஒரு நபராக இருந்து வரும் விஜய் சேதுபதிக்கு அவருடைய வாழ்க்கையில் நயன்தாரா மற்றும் சமந்தா என இருவர் வருகின்றனர். பின்னர் எல்லாம் டபுள் டபுளாக கிடைக்கிறது. இதனால் விஜய்சேதுபதி வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகிறது. ஒரு கட்டத்தில் சமந்தா, நயன்தாரா யாரை பிடிக்கும் என கேட்க பிரபு நடத்தும் நிகழ்ச்சியில் கேட்க இருவரையுமே பிடிக்கும். இவங்க ரெண்டு பேரையுமே கல்யாணம் செய்து கொள்கிறேன் என விஜய் சேதுபதி கூறுகிறார். அதன் பின்னர் என்ன நடந்தது? யாரை திருமணம் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
விஜய் சேதுபதி தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் இயல்பாக வாழ்ந்து ள்ளார்.
நயன்தாரா இந்த படத்தில் ரொம்பவும் மெலிந்து காணப்பட்டாலும் தன்னுடைய சூப்பரான நடிப்பால் அதையெல்லாம் மறக்க செய்து விடுகிறார்.
விஜய் சேதுபதிக்கு இணையாக நடித்துள்ளார் நடிகை சமந்தா. ஸ்ரீசாந்துடன் காதல் பிரேக் அப் ஆக அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் காதல் மலர்கிறது.
மேலும் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர். வித்தியாசமான கதை காமெடி என அனைத்திலும் பட்டயக் கிளப்பியுள்ளார்இயக்குனர் விக்னேஷ் சிவன்.
அனிருத் இசையில் பாடல்கள் மட்டும் இல்லாமல் பின்னணி இசை கதைக்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவு படத்திற்கு உயிர் கொடுத்துள்ளது எடிட்டிங் சூப்பர்.
விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பு, அனிருத் இசை, படத்தின் திரைக்கதை அனைத்தும் இயல்பாக அமைந்துள்ளது
காத்துவாக்குல 2 காதல்- ஜாலி யான ஒரு படம்
