கதையில் சரத்குமார் கடற்கரை பகுதியில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் முரட்டு தாதாவாக நடித்துள்ளார்.இவரது மகளான தீபிகா சதீஷ் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் சக மாணவரான இந்திரஜித் ஜெகஜித் மீது காதல் கொள்கிறார்.இந்த காதல் விஷயம் சயத்குமாருக்கு தெரிய வர அவர் கோபமடைந்து இந்திரஜித்தை தனியாக படகில் நடுக்கடலுக்கு கடத்திச் சென்று கொல்ல திட்டமிடுகிறார். இந்திரஜித்தை அடித்து சித்ரவதை செய்கிறார்.இந்த வேளையில் எதிர்பாராத நிலையில் சரத்குமார் சிக்கலுக்குள்ளாகிறார்.இருவருமே உயிருக்கு போராடும் நிலையில் என்ன நடக்கிறது என்பதுதான் மீதிக்கதை.
சரத்குமார் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் முற்றிலும் மாறுபட்ட வகையில் நடித்து அசத்தி இருக்கிறார்.
இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ் ஆகியோர் அவருக்கு ஈடுகொடுத்து சிறப்பாக நடித்துள்ளனர்.
மற்றும் வையாபுரி,ஸ்ரீஜித் ரவி,பிர்லா போஸ்,தாமரைச்செல்வி சர்ஜின்,மைதிலி சத்யராஜ்,பினிஸ் பாபு,பிஜு மவுன்கல் வர்கீஸ்,தீனா பாட்டியா ஆகியோர் தங்களது பணிகளை சிறப்பாக செய்துள்ளனர்.
வில்லியம் பிரான்சிஸ் இசையும்,ஆனந்த் என் ராய் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
காதலும்,மனிதாபிமானமும் கலந்த கதையை தேர்ந்தெடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து உணர்வு பூர்வமாக இயக்கி இருக்கும் இயக்குனர் மாதவ் ராமதாசன் அவர்களுக்கு பாராட்டுகள்.
ஆழி வித்தியாசமான காதல் கதை.
