அனோமி விமர்சனம்​

பாவனாவின் பெற்றோர் ஒரு விபத்தில் உயிரிழந்துவிடுகின்றனர்.விபத்தில் உயிரிழந்த பெற்றோரின் நினைவுகளால் பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன் பாதிக்கப்படுகிறார்.பாவனா ஒரு தடயவியல் நிபுணர் என்பதால் தன் தம்பியை மனநல மருத்துவரிடம் காட்டி தற்கொலை எண்ணம் தம்பிக்கு வராதவாறு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்கிறார்.ஒருபுறம் அமைதியான வாழ்க்கை வாழும் பாவனா இந்நிலையில் மறுபுறம் நகரையே உலுக்கும் மர்மமான கொலைகள்.ஒரு நாள் தனது தம்பி ஷெபின் பென்சன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதைக் கண்டு பாவனா அதிர்ச்சியடைகிறார்.இந்தக் கொலைகளை விசாரிக்க ஏசிபி முகமது ரகுமான் நியமிக்கப்படுகிறார்.கொலையாளி விட்டுச் செல்லும் தடயங்கள் அனைத்தும் ஒரு விசித்திரமான கணித சமன்பாட்டோடு தொடர்புடையதாக இருக்கிறது.ஷெபின் பென்சனின் உடலில் கண்டறியப்படும் சில விசித்திரமான ரசாயனம் பாவனாவிற்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.பாவனாவும் ரகுமானும் வெவ்வேறுவேறு கோணங்களில் இந்த மரணங்களை பற்றி தேடலை தொடர்கிறார்கள்.பாவனாவின் தம்பி ஷெபின் மற்றும் மருத்துவர்களான பினு பப்பு,அர்ஜுன் லால் ஆகியோரைச் சுற்றி நகரும் சம்பவங்கள்,இந்தக் கொலைகளுக்கும் பாவனாவின் கடந்த காலத்திற்கும் என்ன தொடர்பு என்பதை நோக்கிப் பயணிக்கிறது.சமூகத்திலிருந்து அந்நியப்பட்டுப் போன ஒரு நபரின் வக்கிரமான பழிவாங்கல் படலமா அல்லது அறிவியல் ரீதியான தேடலா இந்தக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் மர்மம் எதைக் குறிக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.
ஜாரா பிலிப்பாக நடித்துள்ள பாவனா தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்.
ஏசிபி முகமது ஜிப்ரானாக வரும் ரகுமான் ஒரு அனுபவமிக்க போலீஸ் அதிகாரியாக தனது திறமையான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
மற்றும் ஷெபின் பென்சன்,பிரசாத் ஈஸ்வர், பினு பப்பு,அர்ஜுன் லால்,திரிஷ்யா ரகுநாத் மற்றும் சுமித் நாவல் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையும்,சுஜித்சாரங் ஒளிப்பதிவும் கதைக்கு விறுவிறுப்பையும் கூடுதல் பலத்தையும் கொடுத்துள்ளது.
வெறும் பேய் படமாகவோ அல்லது சாதாரண கொலையாளி படமாகவோ இல்லாமல் அறிவியல் ரீதியான காரணங்களை கையில் எடுத்து சிறந்த முறையில் திரைக்கதையை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் ரியாஸ் மராத்துக்கு பாராட்டுகள்.
அனோமி விறுவிறுப்பு நிறைந்த க்ரைம் த்ரில்லர்.