முஸ்தபா முஸ்தபா விமர்சனம்

நாயகன் சதீஷ் தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில்பணியாற்றுகிறார்.டாக்டரான மோனிகா சின்னகோட்லாவும் காதலிக்கிறார்கள்.இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக்கொடி காட்ட திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடக்கின்றன.“மது அருந்த மாட்டேன்”என்று காதலிக்கு சத்தியம் செய்திருக்கும் சதீஷ் நண்பர்களுடன் நடந்த ஒரு பார்ட்டியில் குடிக்க நேரிடுகிறது.இதனால் கோபமடையும் மோனிகா காதலை முறிக்கிறார்.பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு மீண்டும் காதலைச் சேர்த்துக்கொண்டு,திருமண வரவேற்பு நடக்கும் வேளையில் ஒரு பேரிடி விழுகிறது. திருமணத்திற்குச் சரியாக ஒரு நாள் முன்னதாக கார்த்திக்கின் செல்போனுக்கு ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வருகிறது. இதில் சதீஷ் வேறொரு பெண்ணுடன் படுக்கையறையில் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவினால் சதீஷின் திருமண வாழ்வு மட்டுமன்றி அவரது நற்பெயரும் சிதைந்துவிடும் என்ற சூழல் உருவாகிறது. இந்த இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்க தனது நெருங்கிய நண்பன் சுரேஷ் ரவியின் உதவியை நாடுகிறார் சதீஷ் தனது நண்பர்கள் வாசு மற்றும் ஹேக்கர் கருணாகரன் ஆகியோருடன் இணைந்து, இந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்க போராடுகிறார்.அந்த வீடியோவின் பின்னணி என்ன அதை பதிவேற்றியது யார் அதை எப்படித் தடுத்தார்கள் கார்த்திக்​ திருமணம் நடந்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
சதீஷ் காமெடியையும் எமோஷனையும் கலந்து சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.
மற்றும் சுரேஷ் ரவி,மோனிகா சின்னகோட்லா,மானசா சௌத்ரி, கருணாகரன்,புகழ்,ஜாவா சுந்தரேசன், லிவிங்ஸ்டன்,உமா,சூப்பர் குட் சுப்பிரமணி, பாவெல் நவகீதன்,ஐஸ்வர்யா தத்தா,விஜே பார்வதி,விஜே மகேஸ்வரி,சாணக்யன் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையும்,ஒளிப்பதிவாளர் விஷ்ணு ஸ்ரீயின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.
ஒரு வீடியோவால் ஏற்படும் பதற்றமான கதையை கலகலப்பான விதத்தில் திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும் விதமாக சிறந்த முறையில் இயக்கி இருக்கும் இயக்குநர் பிரவீன் சரவணன் அவர்களுக்கு பாராட்டுகள்.
முஸ்தபா முஸ்தபா கலாட்டா காமெடி கொண்டாட்டம்.