Author: Admin

Actor Director Manobala’s Short film Nannayam”

Actor Director Manobala’s Short film Nannayam”

News
Actor Director Manobala’s Short film Nannayam” Produced and Releasing In Association with Trend Loud Starring Udhaya Ammu Ramachandran Jayaprakash Satyapriya First look will be released today 6th July (Monday) Trailer on 8th July (Wednesday) and the film by Friday the 10th Friday Kindly Support
Sushant and Sanjana bonded over their love for academics and food

Sushant and Sanjana bonded over their love for academics and food

News
Sushant and Sanjana bonded over their love for academics and food Sushant Singh Rajput’s next Dil Bechara will also mark the debut of his leading lady Sanjana Sanghi along with the debut of Mukesh Chhabra as a director. While Chhabra and Sushant are old friends and have been together since Sushant's first film, Sanjana met Sushant for the first time for the film's reading session in a workshop by Mukesh. Both the actors who are academic achievers hit it off immediately over their love for learning and books. Sanjana describes the first meeting over a script reading session, “We both, nerds, had read the script down to its last word respectively, and both our copies looked like they were tattered old novels that had aged over years, with post-it marks, and added notes - the works. I w...
💥அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார்.

💥அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார்.

News
💥அகில இந்திய சமத்துவ மக்கள்கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு சாத்தான்குளம் சென்றார். அன்மையில் மறைந்த ஜெயராஜ் , பெனிக்ஸ் இல்லத்துக்கு சென்று அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ரூபாய் 5 லடசம் நிதி வழங்கினார். சரத்குமாருடன் கட்சி நிர்வாகிகளும் , ஏராளமான தொண்டர்களும் உடன் சென்றிருந்தனர்..!!...
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார்

News
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பாராட்டைப் பெற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் கொரோனா வைரஸ் பரவலால் உலகமே திக்கு முக்காடி போய்க் கொண்டிருக்கும் நிலையில் காவல் துறையினர் தங்கள் உயிரை துச்சமென கருதி பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். ஆனால், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தனது செயல்கள் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். புகார் அளிக்கப்பட்ட 72 மணி நேரத்திற்கு பிறகு ஒவ்வொரு புகார்தாரரிடமிருந்து வழக்கு விசாரணை பற்றி கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். காணொளிக்காட்சி மூலம் துணை காவல் கண்காணிப்பாளர், ஆய்வாளர்கள், வழக்குரைஞர் ஆகியோருடன் அவ்வப்போது கலந்தாலோசனை செய்து வருகிறார். அம்மாவட்ட திருநங்கையர்களும் காவல்துறையுடன் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்செயலைக் கண்டு அனைவரும் பாராட்டி வரும் நி...
Director Vijay Sri’s Dhadha 87- 2.0, starring charu hasan as theprotagonist-

Director Vijay Sri’s Dhadha 87- 2.0, starring charu hasan as theprotagonist-

News
Director Vijay Sri's Dhadha 87- 2.0, starring charu hasan as the protagonist- Dhadha 87 film was released last year and got positive reviews from the audience. Charu haasan acted as the protagonist. The film was written and directed by Vijay sri. Charu hasan played as a local don and proved why he was the National award winner for his versatile acting. While his younger brother 'Padmasri' Kamal haasan is referred to as 'Ulaga Nayagan', Charu hasan Is fondly referred to as Vayathin Ulaga Nayagan ( Aging Superstar) as he has acted in Dhadha 87 at the age of 87. Dhadha 87 film's teaser was released at the time of kaala film teaser release and appreciated worldwide for its making. On seeing that the fans requested to the director that Charu hasan should act as a don throughout a film....

செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால்

News
டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால் சில நாட்களுக்கு முன் நடிகை சாக்‌ஷி அகர்வால், தன்னை டிக்டாக்லிருந்து விலக்கி கொண்டு சீனாவில் தயாரிக்கப்படும் பொருட்களை உபயோகப்படுத்த போவதில்லை என்றும், சீன தயாரிப்புகளின் விளம்பரங்களில் நடிப்பது இல்லை என்றும் முடிவு செய்துள்ளதாக அறிவித்தார். நேற்று மத்திய அரசு டிக் டாக், யுசி பிரவுசர் உட்பட சீனாவின் 59 செல்போன் செயலிகளுக்குத் தடை விதித்திருப்பதை அறிந்து தனது நன்றியை தெரிவித்துள்ளார் நடிகை சாக்‌ஷி அகர்வால் இது இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் முக்கிய முடிவு என்றும், இந்த முடிவு இந்தியாவின் சுயசார்பு திறனை மேம்படுத்தும் என்று கூறியுள்ளார்....
இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform

இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform

News
*இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளம்* ராம் கோபால் வர்மாவின் நேக்கட் திரைப்படம், ஒரு தம்பதியின் உருக்குலைந்த தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிய கதையை அலசுகிறது. ராம் கோபால் வர்மாவின் ஈர்க்கக்கூடிய கேமரா கோணங்களும் காட்சியமைப்பும் படம் முழுக்க பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டுகிறது. https://rgvworld.the-ally.com என்ற தளத்தில் நேக்கட் படத்தை காணலாம். 30,000க்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இப்படம் தொடர்ந்து பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் முதல் ப்ளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட தியேட்டர் அட் ஹோம் தளமான Ally Softwares platform தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இது படைப்பாளிகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் தடையற்ற ஸ்ட்ரீமிங்கை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்க உதவுகிறது. வாங்குபவர்...

“மனிதநேயம் காப்போம், முடிந்தவரை பசியைப் போக்குவோம்”

News
"மனிதநேயம் காப்போம், முடிந்தவரை பசியைப் போக்குவோம்" கெளதம்கார்த்திக் அறக்கட்டளை சார்பாக சேலம் மாவட்டத்தில் சாலையோரங்களில் வாழ்கின்ற மக்களுக்கு @ChandruTamil11 அவர்களால் உணவு வழங்கப்பட்டது. உங்களுடைய சேவைக்கு நன்றி❤️ #GKtrust #GKNECT #GauthamKarthik @Gautham_Karthik @gautham_trust
சாத்தான் குளம் மரணத்தில்  வேண்டும்                           – கவிஞர் வைரமுத்து  சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது.  பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம்.  சிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் செய்துவிட்டது.  குற்றவாளிகள் வேறு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு. ஒரு விசாரணைக் கைதியைக்கூடக் குற்றவாளி என்று அழைப்பது பிழை; குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர காவல்துறையின் அதிகாரமன்று.  காவல்துறையின் அதிகாரம் என்பது உண்மைக்குள் செலுத்தப்படுவதே தவிர உடலுக்குள் செலுத்தப்படுவது அல்ல. 1928இல் விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதிராய், ஜேம்ஸ் காட் என்ற காவல்துறை அதிகாரியின் இடிகள் போன்ற அடிகள் தாங்கித்தான் இறந்துபோனார் என்பது வரலாறு. ஆனால், 2020இல் பச்சைத் தமிழர்கள் இருவர் சிறைக் கோட்டத்தில் செத்துப் போனார்கள் என்றால் நாம் பிறந்ததும் வாழ்வதும் பிரிட்டிஷ் இந்தியாவிலா?  சுதந்திர இந்தியாவிலா?  விதைகளை மறைக்கலாம்; விருட்சங்களை மறைக்க முடியாது. உண்மை இப்போது விருட்சமாகிவிட்டது. மருத்துவ அறிக்கைகளும் நீதித்துறை ஆவணங்களும் தகப்பன் உடம்பிலும் மகன் உடம்பிலும் யுத்தக் காயங்கள் போன்ற ரத்தக் காயங்களை உறுதிபடுத்துகின்றன. அவர்கள் என்ன சமூக விரோதிகளா? தீவிரவாதிகளா? தங்கள் செல்போன் கடையிலிருந்து உலக நாடுகளுக்கு உளவு சொன்னவர்களா? அல்லது சீனா வெற்றிபெற வேண்டும் என்று செய்வினை செய்தவர்களா? நேர்மையாகப் பிழைக்க வேண்டுமென்று கடை விரித்தவர்கள். ஊடரங்கு விதிகளைச் சில நேரங்களில் மீறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஊரடங்கை மீறியதற்காக உயிரடங்கு செய்வதா? செய்தி கேட்ட அன்று என்னால் இரவு உணவு அருந்த முடியவில்லை. இலக்கிய மனதுதான் வலிக்கிறது என்று பார்த்தால் எல்லா மனங்களும் அப்படியே வலித்துத் துடிக்கின்றன.  மெய்யான காவலர்கள் மேன்மைக்குரியவர்கள். கொரோனாவுக்காக உழைத்தவர்களுக்கு நாம் கும்பிட்டு நன்றி சொன்னோம். கொடுமையைக் காணும்போது கும்பிட முடியுமா? குமுறி அழுகிறதே மனது.  காவல்துறைக்கென்று வகுக்கப்பட்ட விதிகளை மறந்துவிட்டோம். 1872இல் இயற்றப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டம் விசாரணைக் கைதிகளைத் துன்புறுத்தக் கூடாது; அவர்கள் மீது வசை மொழி வீசக்கூடாது என்று வகைப்படுத்துகிறது. ஆனால், விசாரணைக் கைதிகளின் உடல்கள் சில காவலர்களுக்கு விளையாட்டு மைதானங்களாகி விடுகின்றன. இரண்டு காவலர்களுக்கு மத்தியில் ஒரு கைதி கால்பந்தாகிவிடுகிறான்.  காவலன் என்பவன் எல்லா உயிர்களுக்கும் கண்களாகவும் உயிராகவும் இருந்து காவல் காப்பவன் என்று பதிற்றுப்பத்து இலக்கியத்தில் பழைய நீதி படைத்தவன் தமிழன். ஆனால், மக்களின் உயிரையும் கண்களையும் பறிப்பவனா காவலன்?  பாதிக்கப்பட்ட உயிர்களுக்கு நீதி வேண்டும். இனி இதுபோல் பரிதவிக்க விடமாட்டோம் என்ற உறுதிமொழி வேண்டும். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களின் வரம்புகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். அந்த அதிகாரம் கட்டுப்பாட்டில் செலுத்தப்படுகிறதா என்று கண்காணிக்கவும் வேண்டும்.  “காக்கை குருவி எங்கள் ஜாதி” என்று கவிதை படித்த இனத்தில் இந்துவும் – கிறிஸ்தவனும் – இஸ்லாமியனும் எங்கள் ஜாதியாக இருக்க மாட்டானா? இருக்க வேண்டும். அவனுக்கு இறப்பு வேண்டாம்; இருப்பு வேண்டும். சத்தியத்தால் எழுதப்படும் தீர்ப்பு வேண்டும்.

சாத்தான் குளம் மரணத்தில் வேண்டும் - கவிஞர் வைரமுத்து சாத்தான் குளத்தில் இறந்துபோன ஜெயராஜ், பென்னிக்ஸ் என்ற இருவரும் வெறும் வணிகர்கள் அல்லர்; மனிதர்கள் மற்றும் தந்தை – மகன் என்ற உறவுக்காரர்கள். அதனால்தான் இது தமிழகத் துயரம் என்பதைத் தாண்டி இந்தியத் துயரமாகிவிட்டது. பெருமைக்கும் பேருழைப்புக்கும் பெயர் பெற்ற தமிழ்நாட்டுக் காவல்துறையைச் சிறுமைக்கு உள்ளாக்கிவிட்டது சிந்தி முடித்த சிவப்பு ரத்தம். சிறைக் கோட்டத்துக்குள் எத்துணையோ தனி மரணங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால், ஒரு குடும்பத்தின் தகப்பனும் மகனும் ஒரே நேரத்தில் இறந்துபோன சம்பவம் இதயத்தின் மத்தியில் இடிவிழச் செய்துவிட்டது. குற்றவாளிகள் வேறு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் வேறு. ஒரு விசாரணைக் கைதியைக்கூடக் குற்றவாளி என்று அழைப்பது பிழை; குற்றம் சாட்டப்பட்டவர் என்பதே சரி. ஒருவன் குற்றவாளி என்று தீர்மானிப்பது நீதிமன்றத்தின் பொறுப்பே தவிர காவல்...
தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

News
தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம். தேவயானி நடித்த அரசு கொரோனா விளம்பரப்படம் தற்போது அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பாகி மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இதுபற்றி தேவயானி கூறியதாவது. இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் எங்களைப் போன்ற கலைஞர்கள் மக்களிடம் பாடலின் மூலமும் குறும்படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்பொழுது அது மிக வேகமாக அனைவரிடமும் சென்றடைகிறது. இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த தமிழக முதல்வருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விளம்பரப் படத்தில் தேசிய விருதுபெற்ற ஆடுகளம் ஜெயபாலன் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ஒரு தந்தை மகளுக்கான பாசப்பிணைப்போடு இந்த விளம்பரம் அமைந்திருக்கிறது. பல வருடங்களுக்கு முன்பு "பாரதி" படத்தில் எனக்கு மருமகனாக நடித்து இப்போது "கட்டில்" திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இ.வி.கணேஷ்பாபு நான் பங்கே...