அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!
அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!
எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதி சென்னை அண்ணாசாலை. இரவும் பகலும் ஓயாமல் வாகனங்கள் செல்லும் சாலை தான் இது.காலை 11 மணி இருக்கும் வெள்ளை வேட்டி, சட்டை அதுவும் அதிமுக கரை வேட்டியுடன் பைக்கில் ஒருவர் ஹெல்மெட் அணிந்துகொண்டு வேகமாய் வந்து ஸ்பென்சர் சிக்னலில் நிற்கிறார்.
அக்கம் பக்கத்தில் இருந்த வாகன ஓட்டிகள் இவர் யார் என்று சிறிய சந்தேகத்துடன் உற்று நோக்குகின்றனர்.அவர்களைப் பார்த்து கையசைத்து சிரிக்கிறார் அவர். அப்போது தான் அவர்களுக்கு தெரிகிறது அவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பது. காரில் இருந்த சிலர் பைக்கில் இருந்த சிலர் இறங்கி அவரை சூழ்ந்துகொண்டு செல்பி எடுத்துக் கொள்கின்றனர்.
"என்ன சார் எங்கே போறீங்க?கார்ல ஏன் வரல? பைக்கில் வந்து இருக்கீங்களே" என்று கேட்கிறார்கள். அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் சிரித்துக்கொண்டே, ஹெல்மெட் என்பது...









