நடிகர் சந்தானத்தின் புதிய படம்.. தந்தை – மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்
நடிகர் சந்தானத்தின் புதிய படம்.. தந்தை - மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்
ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோத்துள்ளார்.
திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார்.
நடிகர் சந்தானம் 'பேரிஸ் ஜெயராஜ்' என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார். கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்த...









