Author: Admin

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது

தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது

News
*தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறது* 2017 இல் வலையொலியில் ஒரு சிறு சேனலாகத் தொடங்கப்பட்ட பிளாக்‌ஷீப், இன்று 50 லட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களோடு (சப்ஸ்க்ரைபர்ளோடு), 6 யூடியூப் சேனல்களை நடத்தும் நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தமிழில் முதல்முறையாக, ஒரு யூடியூப் நிறுவனம், ஓ.டி.டி யில் செயல்படும் நிறுவனமாக உருவெடுக்கிறோம். தமிழக மக்களுக்கென பிரத்யேகமாக தமிழ்நாட்டில் உருவெடுக்கும் முதல் ஓ.டி.டியாக, புகைப்பிடித்தல், மது அருந்துதல், ஆபாசக்காட்சிகள் இவை எதுவும் இடம்பெறாத குடும்பங்களுக்கான ஓ.டி.டி.யாக, தொடங்கும் முதல் நாளிலேயே, புத்தம் புதிதாய் 5 வெப் சீரிஸ்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள், நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் இடம்பெறும் ஓ.டி.டி.யாக - பிளாக்‌ஷீப் நிறுவனத்தின் – BS Value இருக்கப்போகிறது. நிகழ் ஆண்டில் மட்டும் 30 க...
க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

News
க/பெ ரணசிங்கம் பட இயக்குனருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி KJR Studios KJ ராஜேஷ் அவர்கள் தயாரிப்பில் விஜயசேதுபதி ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பில் வெளியான க/பெ ரணசிங்கம் திரைப்படம் மக்களின் ஏகோபித்த ஆதரவினால் பெருவெற்றி பெற்றது. அதன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தயாரிப்பாளர் KJ ராஜேஷ் அத்திரைப்பட இயக்குனர் பெ.விருமாண்டிக்கு maruti XL car ஐ பரிசாக அளித்தார்....
பத்தாண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்!

பத்தாண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்!

News
பத்தாண்டுகளுக்குப் பிறகு வெற்றிமாறனுடன் இணையும் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்! பத்தாண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறனும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசனும் இணைகிறார்கள். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் 'பொல்லாதவன்' படம் மூலம் s.கதிரேசன் தயாரிப்பாளராகவும் , டைரக்டராக வெற்றிமாறனும் திரைத்துறையில் அறிமுகமானார்கள். இதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் இயக்க 'ஆடுகளம்' படத்தை தயாரித்தார்,எஸ்.கதிரேசன். இப்படம் 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றது. மேலும் ‘நய்யாண்டி',' ஜிகர்தண்டா' போன்ற பல படங்களைத் தயாரித்தார். டைரக்டர் வெற்றிமாறன், ‘கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, 'உதயம்', 'காக்காமுட்டை', 'விசாரணை', 'வட சென்னை' போன்ற நல்ல படங்களைத் தயாரித்தார்.'காக்கா முட்டை' தேசிய விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது. 'விசாரணை' தேசிய விருது பெற...
யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகிறது “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் !

யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகிறது “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் !

News
யாரும் எதிபார்த்திராத, நம்பமுடியாத க்ளைமாக்ஸ் காட்சியுடன் வெளியாகிறது "மூக்குத்தி அம்மன்" திரைப்படம் ! 'லேடி சூப்பர்ஸ்டார்" நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் க்ளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. "மூக்குத்தி அம்மன்" திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி படத்தின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். இந்த க்ளைமாக்ஸ் 7500 துணை நடிகர்கள் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இக்காட்சியை படமாக்குவது இயக்குநர்கள் குழு RJ பாலாஜி, NJ சரவணன் ஆகியோருக்கும் மற்றும் மொத்த படக்குழுவினருக்கும் கடுமையான சவாலாக இருந்தது. மிகக்குறுகிய காலத்தில் கடும் உழைப...
அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி

அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி

News
அமைச்சரை கவுரவித்த ஜீ தமிழ் டிவி! தமிழகத்தில் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று ஜீதமிழ். ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்களை கௌரவிக்கும் விதத்தில் ஜீ குடும்ப விருதுகள் என்ற நிகழ்ச்சியை நடத்தியது.வருடம்தோறும் வழக்கமாக சிறந்த சீரியல் நடிகர் நடிகைகளை கௌரவப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் இந்த முறை சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த விழாவில் அமைச்சருக்கு சிறப்பு விருது வழங்கி கௌரவித்துள்ளது ஜீ தமிழ். கொரோனா காலகட்டத்தில் ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தினமும் மக்களோடு பயணித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதில் பொது மக்களுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் காட்டி வந்தவர் அமைச்சர் ஜெயக்குமார். பேரிடர் காலத்தில் தன் உடல்நிலையையும் பொருட்படுத்த...
“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்

“தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்

News
"தனது கனவுகளை தானே அடைந்து அதை பெரும் சாதனையாக மாற்றிய ஒரு நபரைப் பற்றிய கதையை நாங்கள் சொல்லியிருக்கிறோம்"- அமேசான் ப்ரைம் வீடியோவின் சூரரைப் போற்று படத்தில் தனது கதாபாத்திரம் குறித்த சில முக்கிய தகவல்களை நடிகர் சூர்யா பகிர்ந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்படும் சூரரைப் போற்று தமிழ் திரைப்படத்தின் ட்ரெய்லரை அமேசான் ப்ரைம் வீடியோ சமீபத்தில் வெளியிட்டது. சூரரைப் போற்று தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது. அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவலின் ஒரு அங்கமாக, 200க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அனைத்து ப்ரைம் சந்தாதாரர்களுக்காக இப்படம் வரும் நவம்பர் 12 முதல் வெளியாகிறது. ஆக்‌ஷன் டிராமா திரைப்படமான சூரரைப் போற்று படத்தில் சூர்யா, மோகன் பாபு, பரேஷ் ராவல் மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இது குறைந்த விலை விமான நிறுவனமான ஏர் டெக்கான் நிறுவனரும், ஓய்வு...
சூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா

சூரரைப் போற்று’ குறித்து மனம் திறக்கும் சூர்யா

News
*சூரரைப் போற்று' குறித்து மனம் திறக்கும் சூர்யா* ஒரு சில படங்களின் ட்ரெய்லரைப் பார்த்தவுடன், இந்தப் படம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருப்போம். அப்படி சமீபமாக சமூக வலைதளம் தொடங்கி அனைவரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியிருக்கிறது 'சூரரைப் போற்று' திரைப்படம். சூர்யாவின் நடிப்பு, சுதாவின் துல்லியமான இயக்கம், ஜிவிபிரகாஷின் மிரட்டலான இசை என அனைத்துமே இந்த எதிர்பார்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. தீபாவளிக் கொண்டாட்டமாக நவம்பர் 12-ம் தேதி 200-க்கும் அதிகமான நாடுகளில் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. முதன்முறையாக 'சூரரைப் போற்று' படம் குறித்து பேட்டியளித்துள்ளார் சூர்யா. அது பின்வருமாறு: 'சூரரைப் போற்று' படத்தில் உங்களுக்கு பிடித்த விஷயங்கள், கதாபாத்திரம் குறித்து.. சில படப்பிடிப்புகளில் தான் ரொம்ப பிடித்த விஷயத்தை செய்துக் கொண்டிருக்கிறோம் எனத் தோன்றும். 'நந்தா', 'பிதாமகன்',...
ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்

ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்

News
*ஷீலா ராஜ்குமாரிடம் காலில் விழ அனுமதி கேட்ட நடிகர்* *யோகிபாபு ஹீரோ தான் - அழகிய நாயகி ஷீலா ராஜ்குமார் ஓபன் டாக்* *நெகடிவ் கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படும் ஷீலா ராஜ்குமார்* *ரிஸ்க்கான விஷயங்களை முயற்சி செய்ய ஊரடங்கை பயன்படுத்திக்கொண்ட ஷீலா ராஜ்குமார்*. அழகிய தமிழ் மகள் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை ஷீலா ராஜ்குமார். இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பே, இவர் நடித்திருந்த "டூ லெட்" திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல விருதுகளை அள்ளியது. தியேட்டர்களில் வெளியான பின்னும் படத்திற்கும், அதில் நடித்த ஷீலா ராஜ்குமாருக்கும் இன்னும் அதிக பாராட்டுகள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து சீரியலில் இருந்து விலகி சினிமாவில் முழு நேர கவனம் செலுத்த தொடங்கினார் ஷீலா ராஜ்குமார். தமிழில் டூலெட், திரௌபதி என ஒருபக்கம் வெற்றிகளை தட்டிக்கொண...
ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் !

ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் !

News
ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் “மஹா” விரைவில் திரையில் ! நடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில் 50 வது திரைப்படமாக உருவாகும் “மஹா” படம் துவக்கப்பட்டதிலிருந்தே, ஒவ்வொரு கட்டத்த்திலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச்செய்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு போஸ்டரையும் அவர் வெளியிடும்போது ரசிகர்களிடம் கட்டுக்கடங்கா வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடித்து படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவக்கப்பட்டு, தற்போது முழுப்படப்பிடிப்பும் நிறைவடைந்ததில், படக்குழு பெரும் உற்சாகத்தில் இருக்கிறது. இது குறித்து நடிகை ஹன்ஷிகா மோத்வானி கூறியதாவது.... இந்த 2020 ஆம் ஆண்டின் பெரும் பகுதி, இன்னல்கள் நிறைந்ததாக, நோயின் தாக்கத்திலிருந்து, நம்மை தற்காத்து கொள்வதாகவே கடந்து போனது. மனிதர்கள் பெருமளவில் இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி, தங்கள் உயிரை இழந்து, தங்களின் அன்பான குடுமபத்தை...
இயக்குனர் கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா.

இயக்குனர் கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா.

News
இயக்குனர் கே பாக்யராஜின் உதவியாளர் ஜெ.எம் ராஜா எழுதி இயக்கும் குறும்படம் அல்வா. இயக்குனர் கே பாக்யராஜிடம் சித்து பிளஸ் 2 மற்றும் சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இவர் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி கலை இயக்குனர் "DRK கிரண் நடித்திருக்கும் குறும்படம் அல்வா கோவையைச் சேர்ந்த இவர் சினிமா ஆர்வத்தால் பாக்யராஜிடம் உதவியாளராக வேலைக்குச் சேர்ந்து பணிபுரிந்தார் மற்றும் அவரின் தாயார் 'மல்லிகா மூவிஸ்' என்ற பெயரில் பல குறும் படங்களை தயாரித்து இயக்க ஆரம்பித்தார். இந்தியில் உருவாகிக் கொண்டிருக்கும் காந்திஜியின் வரலாற்று படத்தில், தமிழ், தெலுங்கு, மலையாளத்தின் மொழிமாற்று வசனத்தை இவர் எழுதி இருக்கிறார். இவர் இயக்கிய 'ஒரு நாள்', 'இருவர்', 'சொந்த பந்தம்' போன்ற குறும்படங்கள் பல விருதுகளை வாங்கி இவரை நம்பிக்கையான இயக்குனராகவும் திரைத்துறையில் மாற்றியிருக்கிறது. பல படங்களில் எதிர் நா...