BP180 விமர்சனம்

தொழிற்சங்கத் தலைவர் கே.பாக்யராஜின் மகள் ஒரு விபத்தில் இறக்கிறாள்.மகளின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் தரும்படி லிங்கம் டாக்டர் தன்யா எஸ் ரவிச்சந்திரனிடம் கேட்கிறார்.நேர்மையான மருத்துவ அதிகாரியான அவர் மறுத்து விடுகிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர், முன்னாள் எம்.எல்.ஏ, மருத்துவ செயலாளர் என பலரும் உத்தரவிட்டும்,மிரட்டல் விடுத்தும் எதற்கும் அடிபணியாமல் நேர்மையாக செயல்பட்டு வருகிறார். எதற்கும் வளைந்து கொடுக்காத டாக்டர் தன்யா அந்த பெண்ணின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்து தருகிறார்.பிரேத பரிசோதனையின் போது ஒரு அதிர்ச்சியான உண்மையைக்காண்கிறார்.இந்நிலையில் பாக்யராஜின் விசுவாசி தாதா டேனியல் பாலாஜி அடியாட்களை வைத்து மருத்துவமனையை அடித்து நொறுக்கியும், டாக்டர் தன்யாவுக்கு கொலை மிரட்டல் விடுகிறார்.டாக்டரின் புகாரின் பேரில் காவல்துறை ஆணையர், டேனியல் பாலாஜியை அழைத்து மிரட்டி அசிங்கப்படுத்தி அனுப்பி விடுகிறார். இதனால் கடும் கோபம் அடையும் அவர் காவல்துறை ஆணையர் மற்றும் டாக்டர் தன்யாவையும் பழிவாங்க துடிக்கிறார். அதன் பிறகு நடக்கும் தொடர் சம்பவங்கள் என்ன பிரேத பரிசோதனையின் போது டாக்டர் காணும் அதிர்ச்சி என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.
அழுத்தமான கதாபாத்திரத்தில் பாக்யராஜ் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
தங்கம் என்ற கதாபாத்திரத்தில்,தன்யா ரவிச்சந்திரன் மருத்துவர் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார்.
காசிமேடு ரவுடி அர்னால்டு கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி நடிப்பு அபாரம்.
மற்றும் அருள்தாஸ்,தமிழ்,நயனா சாயி, ஸ்வேதாதோரத்தி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஜிப்ரானின் இசையும்,ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
ஒரு பதட்டமான கதையை வடிவமைத்து பயம்,உணர்ச்சி என திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக இயக்கி உள்ள இயக்குனர் ஜெ.பி.அவர்களுக்கு பாராட்டுகள்.
பிபீ180 பதட்டமான த்ரில்லர்.