News

நயன்தாராவின் ‘ஐரா’.. பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நயன்தாராவின் ‘ஐரா’.. பத்திரிக்கையாளர் சந்திப்பு!

News
  கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஐரா'. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமைய...
அதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்!

அதிநவீன தொழில்நுட்பத்தில் சிவசக்தி சினிமாஸ்!

News
சென்னை பாடியில் நல்ல நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இயங்கி வரும் திரையரங்கம் சிவசக்தி சினிமாஸ். தற்போது மேலும் அதிநவீன தொழில்நுட்பமான RGB Laser தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கிறது. இந்தியாவிலேயே இந்த தொழில்நுட்பத்தை நிறுவியிருக்கும் 3வது திரையரங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அதிநவீன தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். மேலும் லேசர் தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்ட குப்பத்து ராஜா, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் ட்ரைலர்களை பார்த்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பல வகையான ப்ரஜக்‌ஷன்களை பார்த்திருக்கிறோம், இங்கு புது வகையான ஒரு லேட்டஸ்ட் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் படூர் ரமேஷ். அவர் தமிழ் சினிமாவில் ஒரு ஜாம்பவானாக மாறிக் கொண்டிருக்கிறார். பல தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறார். இதில் படங்கள் மிக துல்லியமா...
நீயா 2′ இயக்குநர் எல்.சுரேஷ் – யை  புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

நீயா 2′ இயக்குநர் எல்.சுரேஷ் – யை  புகழ்ந்து தள்ளிய இயக்குநர் வெற்றிமாறன்

News
இயக்குநர் வெற்றி மாறன் பேசும்போது    சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.   பிரியதர்ஷினி  ஜம்போ சினிமாஸ்-க்கு நன்றி சொல்லணும். இப்படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. ட்ரைலர் பார்க்கும்போது மிகப்பெரிய படமாக உருவாகியிருக்கிறது. நிச்சயம் வெற்றியடையும்.   விஜி நடன இயக்குநர்  லட்சுமி உயரமாக இருப்பார், கேத்தரின் உயரம் குறைவாக இருப்பார் ஆனால் ஒரே பிரேமில் இருவரையும் வெவ்வேறு உடல் மொழியில் காட்ட வேண்டும். ஜெய் பார்க்கும்போது கேத்தரீனாக தெரிய வேண்டும், பார்க்காதபோது ராய் லட்சுமியாக தெரிய வேண்டும். ஒரே காட்சியில் இருவருக்கு...
உண்மைக் கதையை உரக்கச் சொல்லும் ‘பூமராங்’!

உண்மைக் கதையை உரக்கச் சொல்லும் ‘பூமராங்’!

News
மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'பூமராங்'. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் மார்ச் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. எல்லாமே இருந்தா தான் படம் எடுப்பேன் என சொல்லாமல் இருப்பதை வைத்து படத்தை மிகச்சிறப்பாக எடுப்பவர் இயக்குனர் கண்ணன். மோதலில் தான் காதல் உருவாகும் என்பது போல, எனக்கும் கண்ணன் சாருக்கும் உரசலில் தான் நட்பு ஆரம்பித்தது. எனக்கு கதை எழுதுவதில் ஒரு நம்பிக்கை வர முக்கிய காரணம் இவன் தந்திரன் படம் தான். ஒரு ஹீரோவாக இருந்தாலும் எந்த பிரதிபலனும் பாராமல் உதவக் கூடியவர் அதர்வா. பல காட்சிகளில் எனக்கும் நல்ல முக்கியத்துவம் கொடுக்க சொன்னார். அவரின் அர்ப்பணிப்பு மிக அபாரமானது. நதிநீர் பிரச்சினையை,...
விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் “காக்கி”

விஜய் ஆண்டனி – சத்யராஜ் – ஜெய் கூட்டணியில் உருவாகும் “காக்கி”

News
  ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் "காக்கி" இது வரை சினிமா வரலாற்றில் பல போலிஸ் கதை பின்னனியில் உருவான படங்கள் வெளிவந்துள்ளது. ஆனால் காக்கி திரைப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணியை மய்யப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகவிருக்கிறது "காக்கி" இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர். வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில் குமார் இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்ப...
புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி

புல்வாமாவில் உயிர் நீத்த வீரர்களுக்கு ‘ஜுலைக் காற்றில்’ படக்குழுவினர் தலா ஒரு லட்சம் நிதியுதவி

News
காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். படத்தின் இணை தயாரிப்பாளர்  கருப்பையா அவர்கள் தன்னுடைய வரவேற்புரையில்,“ இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் அவர்களும் நானும் 40 நாற்பதாண்டுகளுக்கு மேல் நண்பர்கள். அவர் மிகச் சிறந்த உழைப்பாளி என்பதை நாங்கள் ஒரு முறை மலைவாசஸ்தலம் ஒன்றிற்கு பயணம் மேற்கொண்டபோது அனுபவப்பூர்வமாக தெரிந்து கொண்டோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் எனது உறவினர். இந்த படத்தின் இயக்குனரும் எனது உறவினரே. அதனால் இது ...
‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

‘ஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

News
ஸ்ரீபெருமாள் சாமி பிலிம்ஸ் சார்பாக C.பெருமாள் தயாரிப்பில் 'ஒற்றாடல்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர்கள் பேரரசு, வ.கௌதமன், ராசி.அழகப்பன், சுப்பிரமணியம் சிவா, தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் கே ராஜன், படத்தின் இயக்குநர் கே எஸ் மணிகண்டன் .,தயாரிப்பாளர் சி. பெருமாள், கவிஞர் சொற்கோ, படத்தின் நாயகர்கள் விகாஷ், முத்துராமன் ,நாயகி டெல்லிஷா, நடன இயக்குநர் கொம்பு முருகன், இசையமைப்பாளர் விஜய் பாபு, சண்டை இயக்குநர் ராக்கி ராஜேஷ், ஒளிப்பதிவாளர் ஆர் கே பழனி, பி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் உதயகுமார், எஸ்.பி.கே எண்டர்பிரைசஸ் எஸ்.பி.குமார், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனிஷ் வீரபாண்டின், நடிகர்கள் பயில்வான் ரங்கநாதன்,  மீசை ராஜேந்திரன், பிஆர்ஒ யூனியன் முன்னாள் தலைவர் டைமண்ட்பாபு, பிஆர்ஓ சங்கத்தலைவர் விஜயமுரளி, செ...
நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

நட்பே துணை’ எனது நிறுவனத்தின் சிறந்த படமாக இருக்கும் – சுந்தர்.சி

News
நடிகர் ஹரிஷ் உத்தமன் பல படங்களில் சண்டை அடிதடி என்று நடித்தாயிற்று, சற்று வித்தியாசமான பாத்திரம் கிடைத்தால் மகிழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தேன். அதுபோலவே இப்படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் நடித்த படங்களிலேயே இந்த படம் தான் எனக்கு மிகவும் பிடித்த படம். நடன இயக்குனர் சிவராஜ் ஷங்கர் பேசும்போது மீசைய முறுக்கு படத்திற்கு பிறகு 'ஹிப்ஹாப் தமிழா' ஆதியுடனும் சுந்தர்.சியுடனும் பணியாற்றுவதில் மகிழ்ச்சி. இப்படம் எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. நடிகர் ராஜ்மோகன் பேசும்போது ஒவ்வொரு கல்லூரிக்கும் நேர்மறையான எண்ணங்களை ஏற்படுத்த செல்வேன். ஆனால் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி தன் படம் மூலமாக நேர்மறையான சிந்தனையை கூறியிருக்கிறார். நடிகர் எரும சாணி விஜய் இப்படத்தின் மூலம் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கும் சுந்...
ஆர் ஜே பாலாஜியின் ‘எல் கே ஜி’ வெற்றி விழா!

ஆர் ஜே பாலாஜியின் ‘எல் கே ஜி’ வெற்றி விழா!

News
வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார், மயில்சாமி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருந்தார். பிப்ரவரி 22ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு நன்றியை தெரிவித்து கொண்டனர். ஆர்ஜே பாலாஜியை நம்பி துணிச்சலாக படம் எடுத்த ஐசரி கணேஷ் சாருக்கு நன்றி. நாயகிக்கான எந்த பந்தாவும் இல்லாமல் பெருந்தன்மையாக, இயல்பாக பழகுபவர். குறித்த நேரத்தில் கேஎஸ் ரவிக்குமார் போல, சிறப்பாக படத்தை எடுத்து கொடுத்த இயக்குனர் கே.ஆர்.பிரபுவுக்கு நன்றி. யார் கேட்டாலும் நடிக்க மறுக்கும் ராம்குமார் அண்ணன் இதில் ஆ...
“ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” ; சீமான் உருக்கம் 

“ரஜினி கமல் பணத்தை தேடி ஓடியபோது நான் இனத்தை தேடி ஓடினேன்” ; சீமான் உருக்கம் 

News
தம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும் கதையின் நாயகர்களாக நடிக்கும் இந்த படத்தில், பிரபல மலையாள முன்னணி நடிகை அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.  மேலும் எம்.எஸ்.பாஸ்கர், இளவரசு ,கூத்துப்பட்டறை ஜெயக்குமார், வினோதினி மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சீமானிடம் உதவியாளராக பணியாற்றிய இரா.சுப்ரமணியன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பல சர்வதேச விருதுகளை குவித்த ’டுலெட்’ படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான செழியன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ’அமீரா’ படத்தின் பூஜை இன்று ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள முனீஸ்வரன் கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும் நடிகர...