சந்திரமுகி 2 விமர்சனம்

 

 

அதே முந்தைய சந்திரமுகி கதை சின்னச் சின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார் இயக்குனர்.
அதே சந்திரமுகி பங்களா இப்போது வடிவேலுவிடம் இருக்கிறது.
பல காலம் வழிபடாமல் விட்ட தங்கள் குலதெய்வம் துர்க்கை அம்மனை வழிபட்டு விட்டு வந்தால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும் என்று குடும்ப சாமியார் ராவ் ரமேஷ் சொல்லிவிட இந்த சந்திரமுகி பங்களாவுக்கு காட்டன் மில் ஓனர் ராதிகா தன் அனைத்து குடும்ப உறுப்பினர்களுடன் வருகிறார்.ராதிகாவின் மூத்த மகள் முஸ்லிம் மதத்தைச் சார்ந்த ஒருவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்திலிருந்து விலக்கி வைக்கிறார்கள். இப்போது அவர்களின் இரண்டு குழந்தைகள் மட்டுமே இருக்க அவர்களையும் அங்கே வரச் சொல்லுகிறார.
அந்த குழந்தைகளுக்கு பாதுகாவலராக நாயகன் ராகவா லாரன்சும் வருகிறார்.
அந்த பங்களாவில் எங்கு வேண்டாமானாலும் யாரும் போகலாம் வரலாம். ஆனால், சந்திரமுகி முதல் பாக கிளைமாக்ஸ் நடந்த அந்த அறையும் , சந்திரமுகி இருந்த அறையும் இருக்கும் தெற்கு திசைப் பக்கம் யாரும் போக வேண்டாம் என்று வடிவேலு கூறுகின்றார்.
ஆனால் யாராவது அங்கே போனால் தானே படமே நகரும் அப்படி துர்க்கை அம்மன் கோவிலில் சுத்தம் செய்ய போய் வேட்டையனை உயிர் கொண்டு எழுந்து வரச் செய்ய, சும்மா இருந்த சந்திரமுகி ஆவி மீண்டும் வேட்டையனை விதியை முடிக்க எழுந்து வருகிறது.
கதையின் படி எல்லா ஆவிகளும் யார் மீதாவது வந்துதானே ஆக வேண்டும்? அப்படி சந்திரமுகியின் ஆவி யார் மீது வருகிறது, வேட்டையன் ஆவி யார் மீது வருகிறது என்பது சஸ்பென்ஸ்.
முதல் சந்திரமுகியில் ஆவியும் இல்லை பேயும் இல்லை எல்லாம் உளவியல் சிக்கல் என்று கதை சொன்ன இயக்குனர் இந்த இரண்டாம் பாகத்தில் எல்லாமே விதியின் செயல் என்று ஆவியின் தலையில் பழியை தூக்கி போட்டு விடுகிறார்.
சந்திரமுகியாக நடிக்க ஒரு உருவம் தேவைப்பட அந்த வேடத்தில் கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் எல்லாப் படங்களிலும் எதைச் செய்வாரோ அதையே இதில் கொஞ்சம் அதிகமாக செய்திருக்கிறார்.
லக்ஷ்மி மேனன் படத்தில் இருப்பதைப் போலவே இல்லை.அவருக்கும் சிறப்பான பாத்திரம் பயமுறுத்தியிருக்கிறார்.
ராதிகாவுக்கு இதில் அவ்வளவு கனமான பாத்திரம் இல்லை வசனம் பேசும் வேடம் மட்டுமே.சுரேஷ் மேனன், ரவி மரியா விக்னேஷ் இன்னும் இரண்டு புது முகங்கள் அவர்களும் ஏனோ கதைக்கு பொருந்தவில்லை.
முதல்சந்திரமுகியில் வந்த அதே பாத்திரத்தில் வடிவேலு வருகிறார்.ஆனால் முதல் பாகத்தை போல் இதில் அவர் ஒன்றி நடிக்கவில்லை கடமைக்கு நடித்திருக்கிறார்.
ஆர் டி ராஜசேகரின் கேமரா நன்றாக செயல் பட்டிருக்கிறது.
தோட்டா தரணியின் செட் ஒர்க்கை பாராட்டலாம்.
எஸ் எஸ் கீரவாணி அவர்களின் இசையமைப்பில் பின்னணி இசை பிரமாண்டம்.
சந்திரமுகி 2 – 2 தான்.