வாழ்வு தொடங்குமிடம் நீதானே விமர்சனம்

 

தரங்கம்பாடி பிண்ணனி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.அங்கே படத்தின் நாயகி நிரஞ்சனாநீதியாருக்கான திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நிரஞ்சனாவுக்கு அந்தத் திருமணத்தில் விருப்பமில்லாமல் ஏதோ ஒரு பதட்டம் இருப்பது தெரியப்படுத்தபடுகிறது.
அது என்ன பிரச்சனை
திருச்சியில் இருந்து தரங்கம்பாடிக்கு ஒரு டாக்குமென்டரி படம் எடுக்க வருகிறார் ஸ்ருதி பெரியசாமி. அவரை தங்கள் வீட்டில் தங்க வைக்கிறார் ஊரில் முக்கியமானவரான நிரஞ்சனாவின் அப்பா.
சுருதியை தன்னுடன் தங்க வைத்துக் கொள்ளும் போது தான் நிரஞ்சனாவுக்கு ஏதோ ஒரு இனம் புரியாத ஈடுபாடு அவர் மேல் ஏற்படுகிறது அதே போல ஈர்ப்புதான் நிரஞ்சனா மீது சுருதிக்கும் ஏற்படுகிறது.
இஸ்லாமிய வழக்கப்படி வாழ்ந்ததால் அவ்வளவாக வெளியுலகை அறியாத நிரஞ்சனாவுக்கு ஸ்ருதி அவளது சின்ன சின்ன ஆசைகளை தீர்த்து வைக்க இருவரும் தன் பாலின ஈர்ப்பு ஏற்பட்டு இருவரும் ஒரு இரவில் தங்கள் காதலைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.கட்டுப்பாடுகள் நிறைந்த நிரஞ்சனாவின் குடும்பம் அதற்கு ஒத்துக்கொள்ள வேண்டுமே இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நிரஞ்சனாவின் அப்பாவிடம் ஸ்ருதி பேச  என்னென்ன விளைவுகள் நடந்தன என்பதுதான் கதை.
இதுபோன்ற கதைக்கு என்னதான் பெண்ணும் பெண்ணும் காதலித்தாலும் அந்தப் பெண்களில் ஒருவர் சற்றே ஆண் தன்மையுடன் இருக்க வேண்டும் அந்த வேடத்துக்கு ஸ்ருதி பெரியசாமி மிகவும் கச்சிதமாக பொருந்துகிறார்.
நிரஞ்சனாவும் சளைத்தவர் அல்ல தன் நடிப்பை நேர்த்தியாகவே செய்திருக்கிறார்.
இப்படி ஒரு உணர்வு பூர்வமான கதையை தயாரித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் முயற்சி பாராட்டுக்குரியது.
சதீஷ் கோகுலகிருஷ்ணன் ஒளிப்பதிவும், தர்ஷன் ரவிக்குமார் இசையும பலம்.
வாழ்வு தொடங்குமிடம் எப்படி எங்கே முடியும்… ?