டீசல் விமர்சனம்

கதையின் நாயகன் ஹரிஷ் கல்யாண் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்க மிக பொறுத்தமாக டீசல் திரைப்படம் அமைந்துள்ளது.
“வடசென்னையில் நடக்கும் டீசல் எண்ணெய் திருட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது இப்படம்.முதல் பாதி டீசல் கொள்ளை மாஃபியாவுக்கும் காவல் துறைக்கும் நடக்கும் மோதலல் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளாக சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாவது பாதி தேசிய வளங்களை குறித்த ஒரு மெசேஜூடன் முடிகிறது படம்.முதல் பாதியையும் இரண்டாம் பாதியையும் சுவாரஸ்யமாக இணைத்த கதை.
காதல்,ரொமான்ஸ் என்று இதுவரை நாம் பார்த்து வந்த நடிகர் ஹரிஷ் கல்யாண் முற்றிலும் மாறுபட்டு வடசென்னை கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிறப்பாக வலம் வருகிறார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு சாய்குமார் நடித்திருக்கிறார் அவர் தனது கதாபாத்திரத்தை கனக்கச்சிதமாக செய்திருக்கிறார்.
வடசென்னையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும் அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்காக போராடும் விசுவாசிகளின் கதையாகவே இந்த டீசல் அமைந்திருக்கின்றது.
17 கிலோமீட்டர் நீளமுள்ள கச்சா எண்ணெய் குழாயில் இருந்து 2 கோடி லிட்டர் கச்சா எண்ணெய் திருட்டு போக நாடே அதிர்ச்சிக்குள் ஆகிறது.யார் எதற்காக இந்த அதிர்ச்சிகரமான திருட்டை நடத்தினார்கள் திருடப்பட்ட கச்சா எண்ணெய் எங்கே பதுக்கப்பட்டுள்ளது சிறையில் இருக்கும் சாய்குமார் என்ன ஆனார் தலைமறைவாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் அனைத்து பிரச்சினைகளையும் எப்படி சரிசெய்து காணாமல் போன 2 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை எப்படி மீட்டெடுத்தார் என்பதே படத்தின் மீதி கதை.
ஹரிஷ் கல்யாண்,அதிரடி ஆக்ஷன் என அனைத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதுல்யா ரவிக்கு குறிப்பிட்டு சொல்லும்படியான பாத்திரம் இல்லை வந்து போகிறார்.
சாய் குமார்,விவேக் பிரசன்னா,வினய் ராய்,அனன்யா,கருணாஸ்,போஸ் வெங்கட், ரமேஷ் திலக்,காளி வெங்கட், சச்சின் கெடேகர், ஜாகீர் உசேன்,தங்கதுரை, மாறன்,கேபிஒய் தீனா,அபூர்வா சிங் ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையும்,ஒளிப்பதிவாளர்கள் ரிச்சர்ட் எம்.நாதன் – எம்.எஸ்.பிரபு ஆகியோரது ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் கடத்தல் உலகத்தில், டீசல் மாஃபியா மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியலால் வடசென்னை மீனவர்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படும் இன்னல்களை பற்றி கதை,திரைக்கதை அமைத்து இயக்கி உள்ள இயக்குனர் சண்முகம் முத்துச்சாமிக்கு பாராட்டுகள்.
டீசல் அனைவரும்  அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை.