‘ டியூட்’ விமர்சனம்

கதையின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் ஈவண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தை நடத்தி வருகிறார் அவருக்கு துணையாக அவரது தாய் மாமன் சரத்குமாரின் மகள் மமிதா பைஜூ உடன் இருக்கிறார்.
இந்நிலையில் அண்ணனான சரத்குமாரிடம் பிரதீப் ரங்கநாதனின் அம்மா ரோகிணி பேச்சு வார்த்தை இல்லாமல் இருக்கிறார்.
தாய் மாமன் சரத்குமாரின் மகளாக மமிதா பைஜூ இருந்தும் அவரை நண்பராக நினைத்து பழகி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். மமிதா பைஜு பிரதீப் ரங்கநாதன் மீது காதல் கொள்ள நண்பராக நினைக்கும் பிரதீப் ரங்கநாதன் அவரது காதலை ஏற்க மறுக்கிறார்.
பிரதீப் ரங்கநாதன் தன் காதலை ஏற்க மறுப்பதால் மமிதா பைஜூ படிப்பதற்காக பெங்களூர் செல்கிறார்.
ஆரம்பத்தில் காதலை ஏற்க மறுக்கும் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூவை காதலிப்பதாக மாமா சரத்குமாரிடம் சொல்ல திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை சரத்குமார் செய்கிறார் .
திருமண நேரத்தில் மமிதா பைஜூ தன்னுடன் படிக்கும் ஹிருது ஹாரூனை காதலிப்பதாக பிரதீப் ரங்கநாதனிடம் சொல்கிறார்.
இந்நிலையில் காதலர்களான மமிதா பைஜுவையும் ஹிருது ஹாரூனை சேர்த்து வைக்க நினைக்கும் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜுவிடம் அதற்கான திட்டத்தை சொல்கிறார்.
முடிவில் பிரதீப் ரங்கநாதன் தன் திட்டப்படி மமிதா பைஜூவை ஹிருது ஹாரூனிடம் சேர்த்து வைத்தாரா
அமைச்
சரத்குமார் மமிதா பைஜூவின் காதலை ஏற்று கொண்டாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரதீப் ரங்கநாதன் ஆக்ஷன்,காதல், காமெடி,செண்டிமெண்ட் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார்.
மமிதா பைஜு இயல்பான நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
பால்வளத்துறை அமைச்சராக நடித்திருக்கும் சரத்குமார் தனது அனுபவம் வாய்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் இசையும்,நிகேத் பொம்மியின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம்.
விறுப்பான திரைக்கதை அமைத்து ஆரம்பம் முதல் இறுதி வரை காதல்,நட்பு,காமெடி என அனைவரும் ரசிக்கும் படி படத்தை இயக்கியுள்ள இயக்குனர் கீர்த்தீஸ்வரன் அவர்களுக்கு பாராட்டுகள்.
‘டியூட்’இளைஞர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் ரசிக்கலாம்.