கதையின் நாயகன் மற்றும் இயக்குநரான ஆர்.ஜே.பி சாதி பாகுபாடு நிறைந்த ஒரு கிராமத்தில் தாய் மற்றும் தந்தையை இழந்து தனது தம்பியுடன் தாத்தா பவுன்ராஜ் அரவணைப்பில் வளர்ந்து வளர்கிறார். தனது பரம்பரைத் தொழில் பறை இசைப்பதையும் கைவிடாமல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தும் வருகிறார்.

அவரது நெருங்கிய நண்பர்கள் சபி மற்றும் ஜிவி ஆகியோருடன் கல்லூரியில் ஜாலியாவும் வலம் வருகிறார். இந்நிலையில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அனந்த் ராமின் மகள் கேத்தி அதே கல்லூரியில் இரண்டாம் ஆண்டில் புதிதாக சேர வரும் போது இவர்களுக்குள் ராகிங் என்ற பெயரில் மோதல் ஏற்படுகிறது.

ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே மோதல்கள் வெடித்தாலும்,காலப்போக்கில் ஆர்.ஜே.பி யார் எந்த சமுதாயத்தை சேர்ந்தவன் என்று தெரிந்தும் அந்த மோதல் காதலாக மாறுகிறது. சாதிப் பாகுபாட்டை தனது கௌரவமாக கருதும் கேத்தியின் தந்தை அனந்த் ராம் அவர்கள் இருவரும் காதலிப்பதை நேரில் காண்கிறார்.இதனால் ஆத்திரமடைந்த அவர் கேத்தியை கண்டித்ததோடு மட்டும் அல்லாமல் கல்லூரிக்கு செல்ல விடாமல் வீட்டிலேயே சிறை வைத்து விடுகிறார்.மேலும் அவர் தனது சொந்த உறவுக்காரப் பையனுக்கு தனது மகளை திருமணம் செய்ய நிச்சயம் செய்கிறார். இந்த விஷயம் அறிந்த ஆர்.ஜே.பி கேத்தியை சென்னைக்கு அழைத்துக் கொண்டு போய் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்.

இருவரும் நண்பர்கள் உதவியுடன் சென்னைக்கு ஓட முயற்சிக்கும் போது, பஸ் நிலையத்தில் இருவரும் மாட்டிக்கொள்கிறார்கள்.அங்கு கேத்தியின் உறவுக்காரர்கள் ஆர்.ஜே.பியை தாக்கும் போது அங்கு இருந்த போலீஸ் அவர்களை மீட்டு அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.அங்கு கேத்தி எடுக்கும் துணிச்சலான முடிவு கேத்தியும் ஆர்.ஜே.பியும் காதலிப்பதை உறுதி செய்யப்படுகிறது.போலீஸ் கேத்தியின் பொற்றோரிடம் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க சமாதானம் பேசி சம்மதிக்க வைக்கிறார்கள்.மேலும் கேத்தியின் பொற்றோரை எச்சரித்து கேத்தியை அவர்களுடன் அனுப்பி வைக்கிறார்கள். அதை தொடர்ந்து சாதி வெறிபிடித்த அந்த மிருகங்கள் காதலர்கள் இருவரையும் என்ன செய்தார்கள் என்பதே படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் மற்றும் இயக்குநராக இரண்டு துறையை கையாண்டு ஆர்.ஜே.பி எதார்த்தமான தனது நடிப்பினை வெளிப்படுத்தி சிறந்த முறையில் நடித்துள்ளார்.
நாயகியாக வரும் கேத்தி திவ்யா கதாபாத்திரத்தில் தனது நடிப்பை ஸ்கோர் செய்துள்ளார்.
மற்றும் பவுன்ராஜ்,செந்தில்,அனந்த் ராம், கலாவதி,சபி,ஜிவி உட்பட அனைவரும் தங்களின் சிறப்பான பங்களிப்பை வழங்கி நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சங்கர் ராம் இசையும்,ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
அறிமுக இயக்குநராக களம் இறங்கி ஆர்.ஜே.பி சாதி பாகுபாடுகளை சாமர்த்தியமான முறையில் திரைக்கதை அமைத்து சொல்ல வந்த கருத்தை சிறந்த காட்சிகள் மூலம் தெளிவு படுத்தியுள்ளார் அவருக்கு பாராட்டுகள்.
திவ்யா சாதி வெறியின் மற்றொரு நகல்.
