மோனிகா செலினா தனது கணவர் வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட தனது கைக்குழந்தையுடன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசிக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் சதாநாடார் நுழைகிறார்.அதே வீட்டில் கொலை செய்யப்பட்ட ஒரு ஆணின் உடலும் இருக்கிறது.இந்த வீட்டில் தஞ்சமடையும் சதாநாடார் மோனிகாவை மிரட்டி பயமுறுத்துகிறார்.இவருக்கும் இறந்து கிடக்கும் நபருக்கும் என்ன பகை சதாநாடாருக்கு வெளியிலிருந்து யார் உதவி செய்கிறார்கள் வீட்டில் இருக்கும் பிணத்தின் பின்னணி என்ன அந்த மர்ம நபரிடமிருந்தும் ஆபத்தான சூழலிலிருந்தும் மோனிகா செலினாவும் அவருடைய கைக்குழந்தையும் தப்பித்தார்களா இல்லையா இதன் பின்னணியில் இருக்கும் சமூகப் பிரச்சனை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கேள்விகளுக்கான விடை கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக சதா நாடார் ஒரு எளிய நடுத்தர வர்க்க மனிதனின் எதார்த்தத்தையும் குடும்ப அமைப்பிற்குள் எழும் சிக்கல்களையும் தனது இயல்பான முகபாவனைகளால் திறம்பட வெளிப்படுத்தி சிறப்பாக நடித்துள்ளார்,
மோனிகா செலினாகைக்குழந்தையுடன் வீட்டில் தனியாகச் சிக்கிக் கொண்டு தவிக்கும் பதற்றத்தையும்,ஒரு தாயின் பயத்தையும் உணர்ச்சிப்பூர்வமாக வெளிப்படுத்தி நடித்துள்ளார்.
மற்றும் பாண்டி,குழந்தை-பேபிஷிவ், சுந்தரம் ஆகியோர் குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் இ.ஜே.ஜான்சன் இசையும்,ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.மனோகுமார் ஒளிப்பதிவும் கதைக்கு கூடுதல் பலம்.
வெறும் த்ரில்லர் படமாக மட்டுமே இல்லாமல் சமுதாயத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த மிக முக்கிய கருப்பொருளை மையக்கருவாக கையில் எடுத்து கதையோடு சேர்ந்த நேர்த்தியாக திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனர் சதா நாடார் அவர்களுக்கு பாராட்டுகள்.
E1 குழந்தைகள் பாதுகாப்பு பற்றி சொல்லும் த்ரில்லிங் கலந்த விழிப்புணர்வு படம்.
