ஏன் என்னை ஏதோ செய்தாய் விமர்சனம்

கதையின் நாயகன் டி.அந்தோணி தாயை இழந்து சிறுவயதிலிருந்தே கடுமையான தனிமையில் வளர்ந்து தன் வீட்டின் சுவரில் “Bar is a temple” என்ற வாசகத்தை ஒட்டி வைக்கும் அளவுக்கு மது மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி மற்றவர் மனம் புண் படும் என்ற சிந்தனை இன்றி கடுமையான வார்த்தைகளை பேசிக்கொண்டு இருள் நிறைந்த வாழ்க்கையை வாழும் இவரின் வாழ்வுக்குள் வங்கம் தாய்மொழியாகக் கொண்ட மதுமிதா தாஸ் என்ற விலைமாது பெண் நுழைகிறாள்;. அவளது தூய்மையான காதலும் அரவணைப்பும் கார்த்திக்கை மெல்ல மெல்ல இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வர இருவரும் ‘லிவிங்-டுகெதர்’ முறையில் வாழத் தொடங்கி திருமணத்தை நோக்கியும் நகர்கின்றன.ஆனால் தன் கட்டுப்பாடற்ற குடிப்பழக்கத்தால் யோசிக்காமல் பேசும் சுபாவத்தால் போதையில் மதுமிதாவை தவறான வார்த்தைகளால் காயப்படுத்தி மீண்டும் அந்த வாழ்க்கையின் வெளிச்சத்தை இழக்கின்றார். இதனால் மனமுடைந்து மதுமிதா அவரை விட்டுப் பிரிய அந்தத் தாங்க முடியாத பிரிவால் குற்ற உணர்ச்சியால் நிலைகுலையும் அவருக்கு அவரது உற்ற தோழன் எப்பொழுதும் உடனிருந்து ஆதரவளித்து மதுமிதாவை சமாதானப்படுத்த முயல்வதோடு அந்தோணி தன் தவறுகளை உணர்ந்து அந்த மனோவியல் ரீதியான போதை மற்றும் இருளில் இருந்து மீண்டு வர எவ்வாறு துணையாக நிற்கிறார் என்பதே மீதிக்கதை.
நாயகனாக டி.அந்தோணி போதைக்கு அடிமையான இளைஞனின் சிக்கலான மனநிலையைக் கண்முன் நிறுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.
நாயகி மதுமிதா தாஸ் தனது முகபாவனை களாலும் வசீகரக் கண்களாலும் அனைவரது கவனத்தையும் கவர்ந்துவிடுகிறார்.
மற்றும் ஜீவா ரவி,ரெஜின் ரோஸ்,நவ்யா சுஜி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவாளர் பீட்ரோ வில்லானி ஒளிப்பதிவும்,இசையமைப்பாளர்கள் ஜெய்கார் ஹரிநாத் மற்றும் அசோக் ஸ்ரீதரன் ஆகியோரின் இசையும் கதைக்கு பலம்.
இப்படி ஒரு சிறந்த வித்தியாசமான கதையை கையில் எடுத்து சிறந்த திரைக்கதை அமைத்து இயக்குநராகவும்,படத்தொகுப்பாளராகவும்,நாயகனாகவும் வலம் வந்திருக்கும் டி.அந்தோணி அவர்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள்.
ஏன் என்னை ஏதோ செய்தாய் சிறந்த புதிய முயற்சி.