“இம்மார்டல்” விமர்சனம்

நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது மாமா பிரிண்டிங் பிரஸில் வேலை பார்த்து வருகிறார்.வாடகைக்கு வீடு தேடிக்கொண்டிருக்கிறார்.இந்த நிலையில் சுமார் 1000 வருடங்களுக்கு முன் ஒரு பெண்ணுக்கு ராட்சச உருவத்தில் குழந்தை ஒன்று பிறக்கிறது. இந்த குழந்தையை கொண்டு போய்விடு என அந்த பெண்ணின் கணவரிடம் பிரசவம் பார்த்த மூதாட்டி கூறுகிறார்.இதனால் அந்த குழந்தையை அங்கிருந்து தொலைதூரத்திற்கு எடுத்து சென்று விட்டுவிடுகிறார்கள் இது முன்னரே நடந்தது, இது ஒரு புறம் இருக்க வீடு தேடி கொண்டு இருக்கும் ஜி.வி யிடம் தன்னுடைய வீட்டில் ரூம் ஷேரிங் உள்ளது, மாதம் ரூ.5,000 தான் வாடகை என கயாடு லோஹர் சொல்ல அவருடைய அழகில் மயங்கி உடனடியாக அந்த வீட்டில் குடியேறுகிறார் ஜி.வி. ஜி.வி. பிரகாஷுக்கு கயாடு லோஹருடன் இருப்பதே மகிழ்ச்சியாக உள்ளதாக உணர்ந்து முதல் சில நாட்கள் அப்படியே சென்றுவிடுகிறது. ஆனால் அதன்பின் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்கள் மீது ஜி.வி-க்கு சந்தேகம் எழுகிறது.இதனால் குழப்பத்தில் சிக்கிக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் கயாடு லோஹர் சாதாரண பெண் இல்லை எதோ ஒரு அமானுஷ்யம் உள்ளது என்பதை அறியும் ஜி.வி, உடனடியாக அந்த வீட்டிலிருந்து கிளம்ப முயற்சி செய்கிறார். அப்போதுதான் அவருக்கு தெரிய வருகிறது, இந்த மொத்த இடமும் கயாடு கட்டுப்பாட்டில் உள்ளது என்று கயாடு லோஹரிடம் சிக்கிக்கொண்ட ஜி.வி அங்கிருந்து தப்பித்தாரா இல்லையா கயாடு யார் இவருக்கும் 1000 வருடங்களுக்கு முன் பிறந்த அந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம் அவர் பின்னணியில் உள்ள கதை என்ன என்பதே மீதிக்கதை.
ஜி.வி. பிரகாஷ் சிறப்பாக நடித்து அசத்தியுள்ளார்.
கயாடு லோஹர் மொத்த கதையும் இவரை மையப்படுத்தியே நகர்வதால் அதனை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவும்,சாம்.சி.எஸ்-ன் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்.
மிகச்சிறந்த கதை களத்தை கையில் எடுத்து அதற்கு சிறந்த முறையில் திரைக்கதை அமைத்து இயக்கிய இயக்குநர் மாரியப்பன் சின்னா அவர்களுக்கு பாராட்டுகள்.
“இம்மார்டல்” எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த அனைவரையும் கவரும் த்ரில்லர்.