அப்துல் ரஃபி பொருளாதாரம் இழப்பு காரணமாக தனது வீட்டில் மூன்று பிள்ளைகளுடன் தனது மனைவியை பிரிந்து வீட்டில் மின்சார இணைப்பு கூட இல்லாமல் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார். ஆனாலும் அவரது பிள்ளைகள் வீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு, வெளியில் இருந்து வீட்டு தேவைக்கு தண்ணீர் பிடித்து வந்து வைத்து விட்டு பின்னர் பள்ளிக்கு சென்று படிப்பதை வழக்கமாக செய்கின்றனர்.
தந்தையின் கண்டிப்பு அதிகரித்ததையடுத்து பிள்ளைகள் தாயை தேடி செல்வதும் ஆனால் அங்கு தாங்கள் பள்ளிக்கு செல்வதற்கு கூட வசதி இல்லாத நிலையில் மீண்டும் வேறு வழி இல்லாமல் தந்தையிடமே திரும்பி வந்து வாழ்க்கையை வாழ்கின்றனர்.இங்கு இருந்தால் மகன்கள் தனது தாயை மறுபடியும் தேடி போய் விடுவார்கள் என்று எண்ணி எனக்கு வெளி மாநிலத்தில் வேலை கிடைத்திருக்கிறது அங்கு செல்லவிருக்கிறேன் என்னுடன் வந்தால் நீங்கள் நல்ல படிப்பை படித்து எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்ளலாம் என்று மகன்களுக்கு தந்தை கண்டிஷன் விதிக்கிறார் அந்த கண்டிஷனை மகன்கள் ஏற்று தந்தையுடன் சென்றார்களா அல்லது தாயுடன் இருக்க விரும்புகிறார்களா என்பதே படத்தின் மீதிக்கதை.
அப்துல் ரஃபி,மிதுன்,ரித்திக் மோகன், நிதின்,பிரார்த்தனா ஸ்ரீகாந்த்,ஜான் எடத்தட்டில்,ராக்ஷி ஆகிய அனைவரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
வேத் சங்கர் சுகவனம் இசை படத்திற்கு பலம்.அதேபோல் அவினாஷ் பிரகாஷ் அவர்கட ஒளிப்பதிவு,எழுத்து,இயக்கம்,எடிட்டிங் அனைத்தும் அருமை பாராட்டுகள்.
நாங்கள் எதார்த்தமான படைப்பு.
