ராயர் பரம்பரை திரைவிமர்சனம்
ராயர் பரம்பரை பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் இவருக்கு காதல் என்றால் பிடிக்காது இதற்கு காரணம் இவரின் தங்கை காதலித்து திருமணம் செய்து கொள்வார் இதனால் இவருக்கு காதல் மீது மிகப்பெரிய வெறுப்பு இதற்காக இந்த ஊரில் யாரும் காதலிக்கக் கூடாது யார் காதலித்தாலும் உடனே தடுத்து விடுவார் இதற்காக ஒரு தனிப்படையை அமைத்து இருப்பார் அந்த தனிப்படையின் தலைவன் தான் மொட்டை ராஜேந்திரன் இதற்கிடையில் ஆனந்தராஜ் மகள் சரண்யா நாயர் நாயகன் கிருஷ்ணாவை காதலிப்பார் கிருஷ்ணாவும் நாயகி சரண்யா நாயரும் இணைந்தார்களா இந்த காதல் வெற்றி அடைந்ததா இல்லையா என்பது தான் படத்தின் மீதி கதை

இயக்குனர் ராமநாதத்திற்கு இது முதல் படம் ஏற்கனவே பல படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் ராம்நாத் தன் முதல் படம் ராயர் பரம்பரை காதலயும் காமெடியையும் மையமாக வைத்து எடுத்து உள்ளார்.

நாயகன் கிருஷ்ணா அதிரடி படங்களில் நடித்து வந்தார் முதல் முறையாக நகைச்சுவை செய்துள்ளார் சிறப்பாகவே செய்திருக்கிறார்

அறிமுக நாயகி சரண்யா நாயர் கொடுத்த கதாபாத்திரத்தை மிகவும் சிறப்பாக அழகாக செய்து இருக்கிறார்
மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆனந்தராஜ் அவருடன் வரும் சேஷு பாவா லட்சுமணன் மனோபாலா மற்றவர்களும் நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்கள் பல காட்சிகள் மிக நீளமான காட்சிகள் . இயக்குனர் ராம்நாத் முதல் படம் என்பதால் கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்திஇருக்கலாம் காமெடியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி விட்டார்.
ராயர்
பரம்பரை காமெடி பரம்பரை
