ஸ்வீட் காரம் காஃபி

லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் ரேஷ்மா கட்டாலாவின் உருவாக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த இணைய தொடரை, இயக்குநர்கள் விஜய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த இணைய தொடரில் லட்சுமி, மது, சாந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மூன்று தலைமுறைகளுக்கிடையேயான கதை

சுந்தரி ( லட்சுமி), காவேரி ( மது), நிவேதிதா ( சாந்தி) என பாட்டி, தாய் மற்றும் மகள் ஆகிய மூவரும் ஆணாதிக்கத்துடன் தினமும் போராடுகிறார்கள். சுந்தரியின் வழக்கத்திற்கு மாறான ஆசைகள்… தன்னையே அதிகமாக நேசிக்கும் காவேரி… தொழில் மீது அதிக கவனம் செலுத்தும் நிவேதிதா.. என எதுவாக இருந்தாலும் சரி இவை மூன்றுமே நம்முடைய சமூதாயத்திற்கு ஏற்றதாக இல்லை என்பதால், அவர்களை சுற்றியுள்ள உலகத்திலிருந்து ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்த மூன்று பெண்களின் எளிய தேவைகள் சமூகத்தால் நிராகரிக்கப்படும் போது, அவர்கள் உண்மையிலேயே தகுதியான சுதந்திரத்தையும்.. இடத்தையும் வழங்குவதற்கு நம் உலகம் இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதனை உணர்த்துகிறது.
சுந்தரி, காவேரி மற்றும் நிவேதிதா ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களில் நியாயமான பங்களிப்பை கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களது வாழ்க்கைக்கான பற்று ஆர்வம் இந்த போராட்டங்களை எதிர்கொள்வதற்கான அவர்களிடம் மன உறுதி நனறாக வெளிப்படுத்தபடுகிறது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைத்த இந்த ஆல்பத்தில் பிரபல பாடர்களான ஜாவேத் அலி, ஆதித்யா ராவ், கபில் கபிலன், கீர்த்தனா வைத்தியநாதன் மற்றும் சத்ய பிரகாஷ் உள்ளிட்ட பாடகர்கள் பாடி பலம் சேர்த்துள்ளார்கள்

தங்களை தாங்களே யார் என்று கண்டறிந்து கொள்ள போராடும் பயணம்