சேத்துமான் விமர்சனம்


சேத்துமான் விமர்சனம்.

எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் ‘சேத்துமான்’ .
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவான படம் ‘சேத்துமான்’.
நாமக்கல் அருகே உள்ள கிராமம். அதில் கூடைப் பின்னி சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கின்றார் பூச்சியப்பன் என்கிற ஒரு தாத்தா.
தனது பேரன் குமரேசன் உடன் வாழ்ந்து வருகிறார்.
பேரனை நன்றாக படிக்க வைத்து பெரிய அதிகாரியாக உருவாக்குவது தான் இவரின் எண்ணம் இலட்சியம் எல்லாமே.
அந்த ஊர் பெரிய பண்ணையாரான வெள்ளையனுக்கு உதவியாக, அவர் சொல்வதை எல்லாம் செய்து வருகிறார்.
ஒரு நாள் பண்ணையாரும் அவரது கூட்டாளிகள் அனைவரும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்பட்டு வாங்குகின்றனர்.
அதை சுவையாக சமைத்து கொடுக்கிறார் பூச்சியப்பன். அப்போது உருவாகும் பிரச்சினையால் அசம்பாவிதம் நடக்கிறது.
அது என்ன.? ஏன்.? எப்படி.? என்பதே கதை.
தாத்தா கதாபாத்திரத்தில் மாணிக்கம்.நிஜமாகவே இவர் மாணிக்கம் தான் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.
பேரனாக வரும் அஸ்வின். தாத்தா மீது அதிக பாசத்தை காட்டி நடித்துள்ளார்
கோவக்கார பண்ணையாராக நடித்திருக்கும் யூடியூப் சேனல் புகழ் பிரசன்னா பாலசந்திரன் நன்றாக இயல்பாக நடித்துள்ளார். பந்தா காட்டி நடித்துள்ளார்
வெள்ளையன் மனைவியாக சாவித்ரிக்கு ஒரு சபாஷ். சுருளி, குமார், ஆசிரியர் ஆகியோரின் நடிப்பு சூப்பர். இயக்குநர் தமிழை
வெகுவாக பாராட்ட வேண்டும் இந்திய நாட்டின் 14வது குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் நாட்டில் எந்த வித முன்னேற்றமும் இல்லை..
அரசுப் பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருப்பதால் பள்ளிகள் மூடும் நிலை… கூடை செய்யும் நேர்மையான பூச்சியப்பனிடம் பண்ணையாரின் அதிகார திமிர்… பன்றி கறிக்கு ஆசைப்பட்டாலும் பன்னி மேய்பவனிடம் பாய்ச்சல் என நிறைய விஷயங்களை சுட்டி காட்டியுள்ளார்இயக்குனர்.
பிரதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
பிந்து மாலனியின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
மொத்தத்தில் இந்த ‘சேத்துமான்’ இயக்குனர் பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் இன்னும் ஒரு மைல் கல்