திரைப்பட வெளியீட்டை ஒழுங்குப்படுத்த வேண்டும் – ‘தோனி கபடி குழு’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ஆரி!
‘தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு எனது பாராட்டுக்கள். தமிழ் கலாச்சாரத்தைச் சார்ந்த ஒரு விளையாட்டை படமாக உருவாக்கி அதை இன்று மேடையேற்றியிருக்கும் படக்குழுவினருக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். அப்புக்குட்டி கூறினார், ‘குடி’ இல்லாமல் ஒரு ட்ரைலரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று. படக்குழுவினர் ‘குடி’யை நம்பி படம் எடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியளித்தாலும் தமிழக அரசு இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவே மதுக்கடைகளை நடத்துகிறது என்பது வருத்தமாகத்தான் உள்ளது.
தமிழ் சினிமா ‘குடி’யை நம்பி இல்லை என்பது ஆறுதல் அளிக்கிறது. ஒவ்வொரு இயக்குநருக்கும் தன்னுடைய முதல் படம் வெளியாகும் வரைக்கும் பல வித துன்பங்கள், இடையூறுகள், தடைகள், மன உளைச்சல்கள் போன்றவை இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ஐயப்பனிடம் அவை எதுவ...
