கதைப்படி ஐந்து விதமான முரண்பாடான கதா பாத்திரங்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பணத் தேவை இருக்கிறது. இந்த தேவையில் நல்லதும் இருக்கிறது கெட்டதும்
இருக்கிறது இதனை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார்கள்.
அனன்யா மணியின் அழகிலும் அவரது பேச்சிலும் சொக்கிப் போன அவரது காதலன் அவருக்குப் பிடித்த நகையை வாங்கிக் கொடுக்கிறார். இழந்த அவர்களது நிலத்தை மீட்டுக் கொடுக்கிறார். இவை அனைத்தும் பணத்தாசை கொண்ட அனன்யா நடத்திய நாடகம் என்பது காதலனுக்கு அப்பொழுது தெரியாது.
இன்னொரு பாத்திரம் இன்ஸ்பெக்டராக வரும் ராஜேஷ் பாலச்சந்திரன்,தன் கையில் சிக்கும் கேஸ்கள் எல்லாரிடமும் பணம் வசூலித்துக் கொண்டிருக்கிறார்.
மூன்றாவது பாத்திரம் டாக்ஸி ஓட்டிப் பிழைப்பு நடத்தும் சுவாதி மீனாட்சி அந்த வேலையும் போய்விட,அதே நேரம் காதல் திருமணம் செய்து கொண்டு ஓடிப்போன சகோதரி கர்ப்பிணியாக திரும்பி வர, காவலாளி வேலை செய்யும் அப்பாவுடன் எப்படிக் குடும்பத்தை நடத்துவது என்று தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்.
நான்காவது பாத்திரங்களான தேஜ் சரண்ராஜும்,ரெஜின் ரோசும் திருட்டு நண்பர்கள்.கார்த் திருட்டு,வழிப்பறி என்று பலவகையிலும் அடுத்தவரின் பணத்தை கொள்ளை அடித்து வருகிறார்கள்.
ஐந்தாவது பாத்திரமாக வரும் விக்ரம் ஆதித்யா பெரிய பணக்காரர்.பணத் தேவை உள்ளவர்களுக்கு எல்லாம் அவசரத்துக்குப் பண உதவி செய்து அதைத் திருப்பித் தரவில்லை என்றால் அவர்களின் உடல் உறுப்புகளைக் கழற்றி விற்றுவிடுவதாக எழுதி வாங்கிக்கொண்டு அதன் மூலம் பணம் பார்த்து வருகிறார்.
இவர்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருக்கிறது.அந்த தொடர்பு எங்கே போய்,எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
கார்த்திக்கின் ஒளிப்பதிவும்,சகிஷ்னா சேவியரின் இசையும் படத்திற்கு பெரிய பலத்தை தந்துள்ளது.
படத்தின் இயக்குனர் விநாயக் துரை இவரே படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்து பட்ஜெட்டுக்கு ஏற்றாற்போல் ஒரு நிறைவான கதையை தந்ததற்கு அவருக்கு பாராட்டுகள்.
வல்லவன் வகுத்ததடா இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மிக சரியான வகுத்தல்.
