Author: admin
ஏன் தீபாவளிக்கு வருகிறோம் – ‘திமிரு பிடிச்சவன்’ விஜய் ஆண்டனி விளக்கம்!
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். ஸ்கிரீன்சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தமிழகம் முழுக்க வெளியிடும் இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
விஜய் ஆண்டனி சாருக்கு இது 9வது படம், எனக்கும் இது 9வது படம். அவருடன் இது எனக்கு 4வது படம். திமிரு இருந்தா தான் நம்பிக்கை இருக்கும். நம் மூதாதையர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தவர்கள், திமிரோடு இருந்தவர்கள். அதை கொஞ்சம் கொஞ்சமாக நம்மிடம் இருந்து எடுத்து விட்டார்கள். திமிரு என்பது நம் உரிமைகளை தட்டிக் கேட்பது. இந்த பெயரை தலைப்பாக வைக்க ஒரு திமிர் வேண்டும். அது விஜய் ஆண்டனி சாருக்கு இருக்கிறது ...
கதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா!
வணிகத்தில் 'சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான விஷயம்' என்ற வழக்கமான, பொதுவான ஒரு கோட்பாடு உண்டு. இது திரைப்படத்துறைக்கும் பொருந்தும் என்ற ஒரு மாயை உண்டு. ஆனால், இந்த கட்டுக்கதை, பலமான கதையை கொண்ட திரைப்படங்களால் உடைத்தெறியப்பட்டதை பார்த்திருக்கிறோம். உண்மையில் சமீபத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படங்கள் போலவே அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் தனது ஜருகண்டி படமும் வரவேற்பை பெறும் என நம்புகிறார் தயாரிப்பாளர் நிதின் சத்யா.
இது குறித்து அவர் கூறும்போது, "இது ஒரு தயாரிப்பாளரின் தன்னம்பிக்கை சார்ந்த விஷயம் என்பதை தாண்டி, சமீப காலங்களில் ரசிகர்கள் கொண்டாடும் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் லிஸ்டில் ஜருகண்டியும் நிச்சயம் இணையும். முதலில், சமீபமாக நல்ல படங்களாக ரிலீஸ் ஆகி, ரசிகர்களை திரையரங்குகளுக்கு அழைத்து வருவதை பார்க்கையில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தனித்துவமான கதைகள...
தனது பிறந்தநாள் பரிசாக சாஹூ படத்தின் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்ட நடிகர் பிரபாஸ்!
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்தநாளில் தனது படம் குறித்த ப்ரத்யேக செய்தி அல்லது காட்சிகளை ரசிகர்களுக்கு விருந்தாக அளிப்பதை வழக்கமாக வைத்திருக்கும் நடிகர் பிரபாஸ் இந்த ஆண்டு தனது பிறந்த நாளான அக்டோபர் 23ம் தேதி, தற்போது தயாரிப்பிலிருக்கும் தனது பிரம்மாண்ட படமான 'சாஹூ' திரைபடத்தின் "Shades of Saaho" எனும் ப்ரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இந்த முன்னோட்ட காட்சிகளில் பிரபாஸின் ஸ்டைலிஷ் லுக் மற்றும் அபு தாபியில் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட சண்டைக்காட்சிகளின் தொகுப்பு இடம்பெற்றுள்ளது. இது வெளியான அந்த நொடியிலிருந்து உலகெங்கிலும் இருக்கும் பிரபாஸ் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதோடு அல்லாமல் இப்படத்திற்க்கான எதிர்ப்பார்ப்பையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
1500 கோடி ரூபாய் வசூல் சாதனை செய்த பாகுபலி 2 படத்திற்கு பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன...
அட்டு நாயகன் நடிக்கும் ” மரிஜுவானா “!
Third Eye Creations சார்பில் MD விஜய் தயாரிப்பில் MD ஆனந்த் இயக்கத்தில் ரிஷி ரித்விக் மற்றும் ஆஷா பார்த்தலும் நடிப்பில் உருவாக இருக்கும் " மரிஜுவானா " படத்தின் படத்துவக்க விழா இன்று நடைபெற்றது .
இதில் சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர்கள் PL தேனப்பன் சரவணன் இயக்குனர்கள் RV உதயகுமார் மற்றும் ராஜு முருகன் ஒளிப்பதிவாளர் செல்வா கில்டு தலைவர் ஜாக்குவார்தங்கம் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் தலைவர் விஜய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
இயக்குனர் ராஜு முருகன் கிளாப் போர்டு அடிக்க படத்தின் முதல் காட்சி பதிவு செய்யப்பட்டது.படக்குழுவை நேரில் சந்தித்த யோகிபாபு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்...






