ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!
ZEE5 ஒரிஜினல் - ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் - வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!
2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது.
ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் - வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது.
இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி
படத்தொகுப்பு - கே.எல்.பிரவீன்
இசை - பிரேம்ஜி
கலை - கதிர்
இயக்குநர் ராதாமோகன் கூறுகையில், ...









