குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத்
*குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! - உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)*
ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் விஷால் நடிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படமும் ஒன்று. காரணம், இப்படத்தை விஷால் இயக்கி நடிப்பது தான். இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தனி பாடலான “லிங்கா...” வெளியான இரண்டு நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில் புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அறிமுகமாகி தங்களது இசையால் மக்களை கவர்ந்து வரும் நிலையில், இப்பாடலை பாடிய ராப் பாடகர் வினோத் என்கிற V7h “லிங்கா...” பாடல் மூலம் இளசுகளின் பேவரைட் பாடகராக உருவெடுத்துள்ளார்.
தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த...









