‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!
*தேசிய விருது பெற்ற வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியானது!*
சரண்ராஜ் செந்தில்குமாரின் சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படமான ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து தற்போது முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் வெளியான ‘மண்டவெட்டி’ படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது இந்தப் படத்தின் முதல் பாடலான ‘ராட்சசியே’ வெளியாகியுள்ளது. டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் சார்பில் சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இந்த சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமியின் உணர்வுப்பூர்வமான குரல், தீபக் வேணுகோபாலின் இசை மற்றும் தமிழ்மணி எழுதியுள்ள பாடல் வரிகள் ஆகியவை இணைந்து...









