News

2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் !

2.5 மில்லியன் இதயங்களை கொள்ளை கொண்ட “ஓ மை கடவுளே” டிரெய்லர் !

News
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் “ஓ மை கடவுளே” படத்தின் டிரெய்லரை தமிழ் சினிமாவின் நம்பிக்கை நாயகன்  நடிகர் சூர்யா வெளியிட்டார். ஏற்கனவே வெளியான டீஸர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், இப்போது வெளியான டிரெய்லர் வெளியான குறுகிய காலத்தில்  2.5 மில்லியன் பார்வைகளை Youtube தளத்தில் கடந்து சாதனை படைத்துள்ளது. டிரெய்லரின் மிக முக்கிய அம்சம் என்னவெனில் படத்தின் கதையோட்டத்திற்கு ரசிகர்களை மிகச்சரியாக தயார்படுத்தும்படி அமைந்துள்ளதே ஆகும். முதலில் டிரெய்லர் படத்தின் கதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறது. முடிவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் நடிகர் விஜய்சேதுபதி பாத்திரம் அசோக் செல்வனிடம் “கோல்டன் டிக்கெட்” ஒன்றை  தருவதாக அமைந்துள்ளது. பரபரப்பு கிளப்பியிருக்கும் இந்த டிரெய்லர் குறித்து இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து கூறியதாவது...  “கோல்டன் டிக்கெட்”பற்றி இப்போது எ...
தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

News
  தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது. தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர், தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள். அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள் வெற்றிக் கொடி நாட...
“வால்டர்” இசை வெளியீட்டு விழா

“வால்டர்” இசை வெளியீட்டு விழா

News
தயாரிப்பாளர் ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு இயக்கியுள்ளார். சத்யராஜின் திரைவாழ்வில் புகழ்மிக்க படம் “வால்டர் வெற்றிவேல்”. தற்போது “வால்டர்”தலைப்பில் சிபிராஜ் காவல் அதிகாரியாக கலக்கியுள்ளார். திரில்லர் பாணியில் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட வால்டர் தேவாரம் அவர்கள் பேசியது… எனக்கு சினிமா அவ்வளவாக தெரியாது. நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மூணாறு. அங்கிருந்தபோது சினிமா பற்றி எதுவும் தெரியாது. நான் சென்னை வந்த பிறகு எம் ஜி ஆர் ஆட்சியில் அதிகாரியாக இருந்தேன். ஒரு பிரச்சனையின் போது இந்திரா காந்தி தமிழகம் வந்திருந்தார். எங்கும் அவரது கூட்டம் நடத்த முடியாத போது என் தலைமையில் சென்னையில் கூட்டம் நடத்தினோம். எம் ஜி ஆர் அவர்கள் கூப்பிட்டு பாராட்டி...
“சீறு” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

“சீறு” பத்திரிக்கையாளர் சந்திப்பு !

News
தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான கருத்துக்கள் கொண்ட படங்களை,  ரசிகர்களை கவரும் வகையில் வெற்றிப்படங்களாக தந்து வரும் Vels Films International சார்பில் Dr. ஐசரி K கணேஷ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “சீறு”. நடிகர் ஜீவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை இயக்குநர் ரத்ன சிவா எழுதி, இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜீவா ஜோடியாக நடிகை  ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார். நவ்தீப் வில்லன் வேடத்தில் நடிக்க, வருண் மற்றும் காயத்ரி கிருஷ்ணா, சாந்தினி முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் நிர்வாக தயாரிப்பாளர் அஷ்வின் பேசியது... கடந்த வருடம் எங்கள் நிறுவனம் சார்பில்  “எல்.கே.ஜி” படத்தை பிப்ரவரியில் தான் ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் “சீறு”படத்துடன் ஆரம்பித்துள்ளோம். தரமான ஆக்‌ஷன் கலந்த, கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறோம். இந்தப்படத்தின் பெரும...
“சைக்கோ” வெற்றி விழா !

“சைக்கோ” வெற்றி விழா !

News
Double Meaning Production சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் “சைக்கோ” திரைப்படத்தை இயக்குநர் மிஷ்கின் எழுதி இயக்கியிருந்தார். உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் இயக்குநர் ராம், ரேணுகா, ஷாஜி, ஆடுகளம் நரேன், சிங்கம்புலி ஆகியோர் முக்கிய வேடங்களில்  நடிதிருந்தனர். கடந்த வாரம் வெளியான  இப்படம் விமர்சகர்களிடம் பெரும் அதிர்வலைகளை கிளப்பி,  ரசிகர்களிடம் பேராதரவு பெற்று வெற்றியடைந்துள்ளது. படம் முழுதும் குவிந்திருக்கும் குறியீடுகள் கொண்ட ஆழ்ந்த திரைக்கதை, உதயநிதி, அதிதி ராவ், நித்யா மேனனின் வித்தியாச நடிப்பு என “சைக்கோ” படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதனையடுத்து இன்று “சைக்கோ” படக்குழு வெற்றியின் நிமித்தம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில் தயாரிப்பாளர் அருண்மொழிமாணிக்கம் பேசியது... பத்திரிக்கை நண்பர்களுக்கும் மக்களுக்கும் நன்றி சொல்ல...
*“சின்ன பட்ஜெட் படங்களுக்கு தடங்கல் கூடாது” ; தமிழக அரசுக்கு நடிகை வசுந்தரா கோரிக்கை*

*“சின்ன பட்ஜெட் படங்களுக்கு தடங்கல் கூடாது” ; தமிழக அரசுக்கு நடிகை வசுந்தரா கோரிக்கை*

News
பாணியின் தன்னாட்சி குடில் படைப்பு மற்றும் பார்ச்சூன் பிக்சர்ஸ் சார்பில் செல்வராம் மற்றும் வெங்கடேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஞானச்செருக்கு’. இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கி ஓவியர் வீரசந்தானம் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் ‘விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில்  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், வ.கௌதமன், பன்னீர்செல்வம், சுப்பிரமணிய சிவா, அஜயன்பாலா, நடிகைகள் மதுமிதா, வசுந்தரா, கோமல் சர்மா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தபடம் குறித்து தொல்.திருமாவளவன் பேசும்போது, “இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். ஞானச்செருக்கு என்கிற பெயரை இன்னும் சாதாரண தமிழில் சொன்னால் அறிவுத்திமிர் என்று சொல்லலாம். தந்தை-மகன்,...
இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை    ” புறநகர் ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

இட ஒதுக்கீடு வேண்டாம் என்று சொன்னால் சாதி ஒழிந்து விடும். இது என் ஆசை ” புறநகர் ” இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேச்சு

News
கமல் கோவின்ராஜ்   தயாரித்து நடித்துள்ள படம் புறநகர். இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் மின்னல் முருகன். E.L.இந்திரஜித் இசையமைத்துளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் கே.ராஜன் பேசியதாவது.. " இது நம்ம ஏரியா படம். நான் வண்ணாரப்பேட்டை. குத்துப்பாடல்கள் எல்லாம் சிறப்பாக இருந்தது. இந்த ஹீரோ அர்னால்டு மாதிரி வந்திருப்ப. இவர் ஹைய்ட்டு இப்படி டான்ஸ் பண்றது கஷ்டம். அதை சூப்பரா பண்ணிருந்தார். இவரிடம் குறையே இல்லை. ஆனால் நம் தமிழ்நாடு ரசிகர்கள் மோசம். ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்தவன் படத்திற்கு ஓடுகிறார்கள். படத்தின் இயக்குநர் மின்னல் முருகன் அருமையா படத்தை இயக்கி இருக்கிறார். படத்தின் கேமரா ப்யூட்டில்புல். இதை சின்னப்ப்படம் என்று சொல்ல முடியாது. 60 கோடிக்கு படம் எடுத்து ரசிகர்கள் தலையில் கட்டி விடுகிறார்கள். மக்கள் பணத்தை இப்படி கொள்ளையடிக்கும் நடிகன...
என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

என்னை தவறாக சித்தரிக்க வேண்டாம் – நடிகை சோனா வேண்டுகோள்!

News
நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடிப்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை சோனா. அவரது நடிப்பிற்குத் தீனி போடும் வகையிலான கதைகள் தற்போது அவரைத் தேடிவர துவங்கியுள்ளன.. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட மலையாளப்படமான பச்சமாங்கா என்ற படத்தில் நடிகை சோனா அதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இப்படத்தில் அவரோடு நடிகர் பிரதாப் போத்தனும் நடித்துள்ளார். ஜெஷீதா ஷாஜி மற்றும் பால் பொன்மணி  தயாரித்துள்ள இப்படத்தை ஜெய்ஸ் இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் ட்ரைலரில் நடிகை சோனாவின் கவர்ச்சியான உடை குறித்து பலரும் சோனா இப்படத்தில் மிக கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று செய்தி பரப்பி வருகிறார்கள்.  ஒரு பிரபல தமிழ் நாளிதழ் கூட "ஷகிலா வழியில் சோனா கவர்ச்சியாக நடிக்கிறார்" என்பது போன்ற செய்தியை வெளியீ...
அசுரன் வெற்றி விழா கொண்டாட்டம்

அசுரன் வெற்றி விழா கொண்டாட்டம்

News
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை  பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் ,  அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தனுஷ் பேசியதாவது, "இது மறக்க முடியாத நிகழ்ச்சி . இது நன்றி சொல்கின்ற  மேடை..தாணு சாருக்கு என் நன்றி. வெற்றிமாறனுக்கும் எனக்கும் அவர் கொடுத்த சுதந்திரம் தான் அசுரன் உருவெடுத்ததிற்கு காரணம். ஜிவிக்கு என்னுடைய நன்றி. இந்தபடத்தின் பின்னணி இசையில் தான் படத்தின்  25%  சதவிகிதம் இருக்கிறது.வேல்ராஜ் அவர்களின் உழைப்பு மிகவும் பெரிது. என் உடன் சேர்ந்த நடித்த எல்லா நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும்...
“காத்த வர விடு: Let Chennai Breathe” இசை காணொளி வெளியீடு, மற்றும் ஹிப்-ஹாப் கச்சேரி

“காத்த வர விடு: Let Chennai Breathe” இசை காணொளி வெளியீடு, மற்றும் ஹிப்-ஹாப் கச்சேரி

News
“Kodaikanal Won’t” புகழ், சோபியா அஷ்ரப்,  ராப் பாடகர், மற்றும் காலா  படத்தின் “நிக்கல் நிக்கல்”  பாடல் எழுதிய G.லோகன்  அவர்களையும் கவர்ந்த காற்று மாசுவால் நீண்ட நேரம் செயல்படும் தன்மையை இழந்த சடுகுடு மாணவர்களின் வடசென்னை சடுகுடு ஆசிரியர் வருத்தத்துடன் கூறிய  கதையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட  “காத்த வர விடு: Let Chennai Breathe” பாடல் வெளியீடு. நாள்:   ஞாயிற்றுக்கிழமை,  12  ஜனவரி 2020 நேரம்:  காலை 11.00 மணி இடம்:  ராகசுதா ஹால்,  85/ 2,  லூயிஸ் அவென்யூ  5வது தெரு,  நாகேஸ்வரராவ் பார்க் அருகில்,  பாஸ்கரபுரம்,  மயிலாப்பூர், சென்னை. பாடலின் இயக்குனர் ரத்தீந்திரன் R பிரசாத், “Kodaikanal Won’t” மற்றும் "சென்னை புறம்போக்கு பாடல்" ஆகியவற்றை தயாரித்துள்ளார். அவரின் முதல் திரைப்படம் "இது வேதாளம் சொல்லும் கதை" இயக்கப்பட்டு வெளியீட்டை காத்திருக்கு, மற்றும் கார்த்திக் சுப்பாராஜ்-இந் தயாரிப்ப...