News

அதிரடி ஆக்ஷன் திரில்லராக வரும் சாகோ

News
அதிரடி ஆக்‌ஷன் திரில்லர் படமான சாஹோ, அதன் இறுதிகட்ட படப்பிடிப்பில் உள்ளது. இறுதி கட்ட படப்பிடிப்பு மற்றும் இரண்டு பாடல்கள் ஆஸ்திரியாவின் இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டன. சுஜீத் இயக்கத்தில் பல மொழிகளில் உருவாகும் சாஹோ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள பிரபாஸ், ஸ்ரத்தா கபூர் மற்றும் நடன இயக்குனர் வைபவி மெர்ச்சண்ட் ஆகியோர் இன்ஸ்ப்ரூக்கிற்கு வந்தனர். இந்த படத்தில் பிரபாஸ், ஸ்ரத்தா கபூர், முரளி சர்மா, நீல் நிதின் முகேஷ், வெண்ணிலா கிஷோர், ஜாக்கி ஷெராஃப், அருண் விஜய், சங்கி பாண்டே மற்றும் மந்திரா பேடி ஆகியோர் நடித்துள்ளனர். இன்ஸ்ப்ரூக் மற்றும் டிரோல் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் படம் பிடிக்கப்பட்ட இந்த படத்தின் சமீபத்திய புகைப்படங்களை பார்க்கும்போது, இந்த பகுதிகள் எங்கள் ஆக்‌ஷன் த்ரில்லரின் காட்சிகளை மிகவும் அழகாக்கி இருப்பதாக தோன்றுகிறது...
இயக்குனர் கண்ணன் இயக்கும் காதல் கதையில் நடிக்கும் அதர்வா முரளி & அனுபமா பரமேஸ்வரன்

இயக்குனர் கண்ணன் இயக்கும் காதல் கதையில் நடிக்கும் அதர்வா முரளி & அனுபமா பரமேஸ்வரன்

News
இயக்குனர் கண்ணனின் இயக்குநர் பயணம் பன்முகப்படுத்தப்பட்ட வகை படங்களை உள்ளடக்கியது மற்றும் ஒரு போதும் சிறந்தவற்றை கொடுக்க அவர் தவறியதில்லை. குறிப்பாக, குடும்ப உறவுகளுடன் அழகான காதல் கதைகளை இணைப்பதில் அவரது திறமை ஜெயம் கொண்டான் மற்றும் கண்டேன் காதலை போன்ற படங்களில் மிகச்சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது சமீபத்திய திரைப்படங்கள் முற்றிலும் தீவிரமான மற்றும் சிக்கலான கருப்பொருள் பின்னணியை அடிப்படையாகக் கொண்டவை. அவற்றிலிருந்து சற்று விடுபட்டு குடும்ப கூறுகளுடன் கூடிய அழகான, புத்துணர்ச்சியூட்டும் காதல் கதைகளுக்கு திரும்புகிறார். இது குறித்து இயக்குனர் கண்ணன் கூறும்போது, “ஆம், பார்வையாளர்களுக்கு இடைவிடாமல் தீவிரமான மற்றும் சிக்கலான கதைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன, அதில் எனது படங்களும் அடங்கும் என்பதை நான் உணர்ந்தேன். இந்த மண்டலத்திலிருந்து விலகி ஒரு காதல் கதையை கொடுக்க விரும்பினேன். இத...
‘Content is King’ – Jiivi Thanks Meet

‘Content is King’ – Jiivi Thanks Meet

News
‘Content is King’ is the often celebrated theory of film industry and it’s yet again proved through the groovy success of ‘Jiivi’. The film featuring Vetri and Ashwini Chandrashekar in lead roles were released on June 28 and becoming the favourite of press-media and audiences. Scripted by Babu Tamizh, the film is directed by VJ Gopinath with Vellapandian producing the film for Vetrivel Saravana Cinemas. The entire team was present in the city to express their thanks for making this film a success. Here are some of the highlighting speeches of this occasion. Actress Ashwini Chandrashekar said, “So far, I have been a part of Kannada and Telugu movies, but this is my debut one in Tamil. Kollywood has always been special when it comes to experimenting with newfangled ideas and proving su...
நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

நம்பியார், ரகுவரன் வரிசையில் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்

News
தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு, உற்சாக முகம், பளபள முகம் வெள்ளை வேட்டி சட்டை என்று ஜொலிக்கிறார். காரணம், சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி 2  படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். அதுபோல் வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் ‘டேனி’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘களவாணி 2 படமே உள்ளாட்சி தேர்தலை மையமாக கொண்ட கதை. சொந்த பந்தங்களே கூட பகைவராக மாறும் தேர்தல் அது. முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைக்களம், கதாபாத்திரங்கள் தொடர்ந்தாலும் கதை புதிதாக இருக்கும். படம் முழுக்க நகைச்சுவை இருக்கும். அரசியல் காமெடி கலந்து...
நல்ல கதையம்சத்துடன் வெளியாகும் “போதை ஏறி புத்தி மாறி”

நல்ல கதையம்சத்துடன் வெளியாகும் “போதை ஏறி புத்தி மாறி”

News
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜீவி போன்ற சின்ன பட்ஜெட் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் காலகட்டம் இது. இந்த சூழலில் நல்ல கதையம்சத்துடன் அடுத்து வெளியாகும் திரைப்படம் "போதை ஏறி புத்தி மாறி". ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்கியிருக்கிறார். தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, கே.பி இசையமைத்திருக்கிறார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்த போதை ஏறி புத்தி மாறி தலைப்புக்கு நிறைய எதிர்ப்புகள் வந்தன. ஆனால் இந்த தலைப்பு தான் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். நிறைய க...
தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

தொடர்ந்து வெற்றிப்படங்களில் இடம்பிடித்து வரும் ராஷி கண்ணா

News
தமிழ்சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கன்னா. அவரது பெயரில் உள்ள ராசி அவரது சினிமா கரியரிலும் தொடர்வது அவரது ரசிகர்களைப் போலவே தயாரிப்பாளர்களையும் மகிழ்வித்து வருகிறது.  தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து தற்போது விஜய் சந்தர் இயக்கும் சங்கத்தமிழன் படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக நடித்து வருகிறார். இந்தப்படமும் வெற்றிக்கான உத்திரவாதத்தோடு வளர்ந்து வருகிறது. மேலும் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக கிராந்தி மாதேவ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். மேலும் வெங்கிமாமா என்ற தெலுங்கிப்படத்தில் வெங்கடேஷ், நாக சைதன்யா ஆகியோருடன் நடித்து வருகிறார். மிருதி இயக்கத்தில் சாய் தரம்தெஜ் உடன் ஒருபட...
ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை  தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தனது இசை பயணத்தை தன் தந்தை ஏ ஆர் ரஹ்மான் உடன் தொடங்கினார் ஏ ஆர் அமீன்

News
இசைத்துறையில் பலராலும் திறமை வாய்ந்த புதுப் பாடகர் எனக் கருதப்படும் ஏ ஆர் அமீன், தமிழில் அவரது முதல் சுயாதீன பாடலான சகோவை சோனி மியூசிக் நிறுவனத்துடன் இணைந்து வெளியிட்டுள்ளார். காதல் பற்றியும் நட்பைப் பற்றியும் பேசும் இப்பாடலுக்கு இசை மேதை ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்பாடலை விவேக் மற்றும் ஏ டி கே (ADK) இணைந்து எழுதியுள்ளனர். இப்பாடலை ஏ.ஆர் ரஹ்மான் மற்றும் ஏ ஆர் அமீன் தயாரித்துள்ளனர். இப்பாடலின் முழு வீடியோவை இயக்கி இருப்பது அமித் கிருஷ்ணன். இந்த வீடியோவில் அமீன் பாடுவது அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும் விதமாக அமைந்திருக்கிறது. இப்பாடலைப் பற்றி  அமீன் கூறும்பொழுது,"நான் என் இசைப் பயணத்தை சகோ உடன் தொடங்குவதில் பெரும் மகிழ்ச்சியும் உற்சாகமும் கொள்கிறேன். இப்பாடலை தந்தையுடன் சேர்ந்து தயாரிப்பது பெரும் சவாலாக இருந்தது. ஆனால், அதே சமயம் பெரும் மகிழ்ச்சியையும் அளித்தது. மக்...
நெப்போலியன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்பம் – கிறிஸ்துமஸ் கூப்பன்

நெப்போலியன் நடிக்கும் ஹாலிவுட் திரைப்பம் – கிறிஸ்துமஸ் கூப்பன்

News
கிரிஸ்டல் கிரீக் மீடியா, கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், ‘மாவீரன்’ நெப்போலியன் நடிப்பில் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ கிரிஸ்டல் கிரீக் மீடிய மற்றும் கைபா பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் டானியல் நட்சன் இயக்கத்தில், கோர்ட்னி மாத்யூஸ், ஆரன் நோபிள், ‘மாவீரன்’ நெப்போலியன், ஷீனா மோனின், ராபர்ட் லெனன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு உணர்வுபூர்வமான திரைப்படம் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’. தரமான குடும்ப மற்றும் நம்பிக்கை சார்ந்த திரைப்படங்களை .முன்னெடுத்துவரும் ‘கிறிஸ்டல் கிரீக்’ |நிறுவனமும், சர்வதேச தரத்தில் நல்ல கதைகளங்களைக் கொண்ட திரைப்படங்களை தயாரித்தும், ஆசியாவில் விநியோகித்தும் வரும் ‘கைபா பிலிம்ஸ்’ நிறுவனமும் இணைந்து, ஒரு யதார்த்தமான அழுத்தமான காதல் கதையை மிக நளினமானப் படைத்திருக்கின்றனர். முழுநேர வேலைப் பறிபோன நிலையில், முன்னாள் ஸ்கேட்டிங் சாம்பியனான கோர்...
நடித்தர வர்க்க இளைஞரின் வாழ்கை பிரதிபலிப்பு – தோழர் வெங்கடேசன்

நடித்தர வர்க்க இளைஞரின் வாழ்கை பிரதிபலிப்பு – தோழர் வெங்கடேசன்

News
இயக்குனர் சுசீந்திரன் வழங்க, காலா பிலிம்ஸ் தயாரிப்பில், மகாசிவன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் “தோழர் வெங்கடேசன் காலா பிலிம்ஸ் பி லிட் சார்பாக மாதவி அரிசங்கர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் மகாசிவன் இயக்கத்தில் அறிமுக நாயகன் அரிசங்கர், அறிமுக நாயகி மோனிகா சின்னகொட்லா நடித்திருக்கிறார்கள். எளிய, நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில், ஒரு விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் எந்த விதமான தாக்கங்களையும், வலிகளையும், வேதனைகளையும், பின்னடைவுகளையும் ஏற்படுத்துகிறது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது தோழர் வெங்கடேசன். இத்திரைப்படம் அரசு போக்குவரத்து துறையில் இருக்கும் அவலங்களை சுட்டி காட்டி அதிர்வை ஏற்படுத்தும் எனபெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்பட குழுவினர் காட்சி அமைப்புகள் இயல்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, சமீபத்தில் நடைபெற்ற மயான கொள்ளை ...
அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா

அம்மா, பெண், நடிகை என்ற வரிசையில் இப்போது தான் ரொம்ப திருப்தியாக இருக்கிறது – ஜோதிகா

News
சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிட்டு இருந்தார்கள். நானாக தான் போய் கேட்டேன். ட்ரீம் வாரியர் நிறுவனத்தைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. இயக்குநர் கெளதம் 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்க பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எ...