“சமைக்க சுவைக்க”

“சமைக்க சுவைக்க” – செப்டம்பர் 17 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் புத்தம் புதிய நிகழ்ச்சி..!

 

கலைஞர் தொலைக்காட்சியில் வருகிற செப்டம்பர் 17 முதல் ஞாயிறுதோறும் காலை 11:00 மணிக்கு “சமைக்க சுவைக்க” என்கிற புத்தம் புதிய சமையல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரபல செஃப் தீனாவின் தலைமையில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தின் மிகவும் தனித்துவமான பிரபல உணவுகளை நேரில் சென்று சமைப்பதும், சுவைப்பதும் தான் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு. இவ்வாறு ஊர் ஊராக சென்று, அந்தந்த ஊரில் சமைத்த உணவை, செஃப் தீனா மீண்டும் சமைத்து பின்னர் அதனை ஓர் சிறப்பு விருந்தினருக்கு விருந்தளிப்பது இந்த நிகழ்ச்சியின் முக்கியமான நிகழ்வு.
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு ஸ்பெஷலான உணவு இருக்கும். இதுவரை நாம் பார்த்திராத நம் கலாசாரத்துக்கு நெருக்கமான, பரம்பரிய உணவு வகைகளை அந்தந்த ஊருக்கே நேரில் சென்று சமைப்பதை காணத்தயாராகுங்கள்.