Author: admin
ராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும்”எனை சுடும் பனி”
எஸ்.என்.எஸ்.பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு "எனை சுடும் பனி" என்று பெயரிட்டுள்ளனர்..
இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார்...இவர் ஏற்கெனவே ராம்ஷேவா இயக்கிய டீ கடை பெஞ்ச் படத்தில் இரண்டாவது கதா நாயகனாகவும் "என் காதலி சீன் போடுறா " படத்தில் முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்தவர். இந்த படத்தில் கதா நாயகனாக உயர்வு பெறுகிறார்.
கே.பாக்யராஜ் சி.ஐ.டி அதிகாரி வேடமேற்கிறார்...
கதா நாயகிகளாக உபாசனா RC , சுமா பூஜாரி நடிக்கிறார்கள்.
மற்றும் சிங்கம்புலி, மனோபாலா, சித்ராலட்சுமணன், தலைவாசல் விஜய், கானா சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வெங்கட்
இசை - அருள்தேவ்
பாடல்கள் - ராம்ஷேவா வசந்த் ,கானா சரண்
கலை - அன்பு
நடனம் - சாண்டி ,சிவசங்கர்,லாரன்ஸ்சிவா
ஸ்டண்ட் - டேஞ்சர் மணி.
தயாரிப்பு மேற்பார்வை - ஜீவா
தயாரிப்பு - எஸ்.என்....
வேலுபிரபாகரன் அறிவுமிக்க ஆசான், நான் மக்கு மாணவி – கஸ்தூரி
"முடிவில்லா புன்னகை" படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இயக்குனர் வேலுபிரபாகரன் கூறுகையில்,
"இப்படத்தின் பாடல்களைக் கேட்கும்போது நான் எதிர்பார்த்ததைவிட நல்ல கருத்துக்கள் இருக்கிறது. ‘கவலை’ என்கிற பாடல் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. ஆனால், கருப்பர்கள் மண்ணில் கருப்பாகஒரு பெண்ணைப் பார்த்து பயப்படுவது என்பது போன்ற விஷயங்கள் வேடிக்கையாக இருக்கிறது. ரத்னகுமாரைப் பார்க்கும்போது, கிழக்குச் சீமையிலே படம் புத்திசாலித்தனமாக திரைக்கதைஅமைப்பாளர்கள் மலையாத்தில் தமிழில் பஞ்சு கமர்சியலாக படமெடுப்பார்.
ஆனால், எம்.டி.வாசுதேவநாயர் மாதிரி இலக்கிய நடையில் எழுதக் கூடியவர்கள் தமிழில் இல்லை. எழுத்தாளர்கள்இல்லாத சினிமா என்றிருக்கையில், ‘கிழக்குச் சீமையிலே’ பார்த்தேன். மண் மணம் மாறாமல் அவருடைய எழுத்து இருந்தது. அ...
“பற படம் சமூகத்தில் ஆழமான புரிதலை ஏற்படுத்தும்”பா.ரஞ்சித் பாராட்டு
ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இங்கு பறத்தலுக்கு பேதமற்ற சுதந்திரம் வேண்டும். அப்படியான சுதந்திரத்தைப் பேசும் படமாகவும் பற படம் தயாராகி இருக்கிறது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால் தயாரித்து இருக்கும் இப்படத்தை கீரா இயக்கியுள்ளார். பற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளர் ராமச்சந்திரன் பேசியதாவது,
இந்தப்படத்தைப் பற்றி ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு அருமையான பயணமாக இந்தப்படம் இருந்தது. படமும் அருமையாக வந்திருக்கிறது. இயக்குநர் கீராவிற்கு நன்றி. சமுத்திரக்கனி அவர்கள் எங்களுக்கு சிறப்பான...
தமிழ் சினிமாவின் காதல் காவியம் ‘மெஹந்தி சர்க்கஸ்’ – கே ஈ ஞானவேல் ராஜா பாராட்டு!
ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலரும் பாடல்களும் படம் தாங்கி நிற்கும் கதையின் கணத்தை நம் மனத்திற்குள் ஏற்றியுள்ளது. இப்படியான படங்களை தயாரிப்பதன் மூலம் சினிமா மீது தனக்குள்ள காதலை நிறுவி வருகிறார் மெஹந்தி சர்க்கஸ் படத்தின் தயாரிப்பாளர் ஸ்டியோ க்ரீன் K.E.ஞானவேல்ராஜா. படத்திற்கு ராஜு முருகன் எழுதிய கதை வசனம் பெரும் பலம் என்றால் சரவண ராஜேந்திரனின் திரைக்கதையும் இயக்குமும் ஆகப்பெரும் பலம் என்கிறார்கள் படக்குழுவினர். இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று நடைபெ...
வாட்ச்மேன் பத்திரிகையாளர் சந்திப்பு
டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரித்திருக்கும் முதல் படம் 'வாட்ச்மேன். ஜிவி பிரகாஷ்குமார், சம்யுக்தா ஹெக்டே, சுமன், ராஜ் அர்ஜூன், யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குனர் விஜய் இயக்கியிருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் ஏப்ரல் 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எங்கள் நிறுவனத்தில் மூன்று படங்கள் தயாரித்து வருகிறோம். அதில் முதல் படம் தான் வாட்ச்மேன். இயக்குனர் விஜய் எப்போதுமே நாயகிகளை அறிமுகப்படுத்துவார், அவர்கள் மிகவும் புகழ் பெற்ற நடிகைகளாக வலம் வந்திருக்கிறார்கள். அவர் இப்போது எங்களை ஒரு தயாரிப்பாளராக அறிமுகப்படுத்துகிறார். எங்கள் முதல் படத்திலேயே மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்கள் அமைந்தது எங்களுக்கு கிடைத்த வரம், இந்த கோடை விடுமுறையில் அனைவரும் ரசிக்கும் படமாக ...
முனீஸ்வரன் சிலை முன்பு சாமியாடிய மனிஷா யாதவ்.
"சண்டி முனி"படத்திற்காக
மில்கா எஸ். செல்வகுமார் இயக்கினார்.
சிவம் மீடியா ஒர்க்ஸ் பட நிறுவனம் சார்பில் D.சிவராம் குமார் அதிகப் பொருட்செலவில் தயாரிக்கும் படம் சண்டிமுனி. நட்ராஜ் கதா நாயகனாக நடிக்கிறார்.
நாயகியாக மனிஷா யாதவ் நடிக்கிறார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மற்றும் வாசுவிக்ரம், சாம்ஸ், ஆர்த்தி, தவசி, குண்டு ரவி, முத்துக்களை, கெளரி புனிதன், கோவை ஈஸ்வரி, விசித்திரன், காதல் சுகுமார், சூப்பர் சுப்பராயன், ஷபிபாபு, விஜய்பூபதி, நரேஷ் ஈஸ்வர் சந்துரு, லொள்ளு சபா பழனி,மேட்டூர் சேகர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - செந்தில் ராஜகோபால்
இசை - A.K.ரிஷால் சாய்
பாடல்கள் - வ.கருப்பன்
கலை - c.முத்துவேல்
...




