Author: admin

‘குப்பத்து ராஜா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில்..

‘குப்பத்து ராஜா’ பத்திரிக்கையாளர் சந்திப்பில்..

News
எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'குப்பத்து ராஜா'. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன். நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை போலவே...
டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’ 

டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’ 

News
‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’ காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’. வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. '...
வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

வியு சினிமாஸ் மற்றும் நியு பார்ன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் தேவதாஸ்

News
தம்பி ராமையா-ஷாகுல் ஹமீது இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குனர் இரா மகேஷ் இயக்கும், உமாபதி, யோகிபாபு அசத்தும் தேவதாஸ். ‘அதாக்கப்பட்டது மகா ஜனங்களே’, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’ ஆகிய  படங்களை தொடர்ந்து உமாபதி ராமையா-யோகி பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் தேவதாஸ். இன்றைய தமிழ் சினிமாவின் நம்பிக்கை நடிகர் யோகி பாபு கலகலப்பூட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இத்திரைப்படம் முழுவதும் வலம் வருகிறார். மனித வாழ்க்கை என்பது இன்பமும், துன்பமும் இரண்டற கலந்தது என்பது அறிந்ததே. ஆனால், ஒரு மனிதனுக்கு மிகப் பெரிய சந்தோஷமும், மிகப் பெரிய துக்கமும், ஒரே நேரத்தில் நடக்குமென்றால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதே இத்திரைப்படத்தின் கதைக்களம். இந்த  உணர்வுப்பூர்வமான கதையை நகைச்சுவை கலந்து, ஜனரஞ்சகமாக விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இப்படம் பார்க்கும் அனைவரும் பல கட்...
சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”

சைதன்யா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நஸ்ரேன் சாம் எழுதி, இயக்கும் மும்மொழி திரைப்படம் “நிக்கிரகன்”

News
சைதன்யா சினி கிரியேஷன்ஸ் சார்பாக, சைதன்யா சங்கரன் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில், அறிமுக இயக்குனர் நஸ்ரேன் சாம் இயக்கத்தில், பிரஸாந்த் தாவீத், கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் மும்மொழி திரைப்படம் ‘நிக்கிரகன்’. இரு கல்லூரி மாணவர்கள், பகுதி நேர வேலையாக,  ஒரு எஃப் எம் சேனலில் ரேடியோ ஜாக்கியாக வேலை பார்க்கிறார்கள். அவர்கள் வழங்கும் ஒரு புதுமையான, கலகலப்பான நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்கின்றனர். பின்னர் அதையே முழுநேர வேலையாகவும் மாற்றிக் கொண்டுவிட, வேடிக்கையாக சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களே அறியாத வண்ணம் திடீரென தடம் மாறுகிறது. இணையத்தில் மறைந்துள்ள ஆபத்துகள் என்னென்ன, அதில் சிக்கிக்கொண்ட அவர்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதைக்களம். நம் அன்றாட வாழ்வில் கடந்து வருகின்ற, சற்றே முக்கியத்துவமற்ற நிகழ்வ...
ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

ஏப்ரல் 12ல் சேரனின் “திருமணம்” மறு வெளியீடு

News
மார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய 'திருமணம்' திரைப்படம் வெளியானது. கதாநாயகனாக உமாபதி ராமையா, நாயகியாக காவ்யா சுரேஷ் நடித்திருக்க, முக்கிய வேடங்களில் இயக்குனர் சேரன், தம்பி ராமையா, எம். எஸ். பாஸ்கர், சுகன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடும்ப உறவுகள், நடைமுறை வாழ்வின் யதார்த்தங்கள்,  சென்டிமெண்ட் என நல்ல கதை களமும்,  அருமையான விமர்சனங்களும் கிடைத்த போதும், மாணவமணிகளுக்கு தேர்வுகள் இருந்ததால் மக்கள் பெருமளவில் வரவியலாத நிலையிருக்க, திரையிடுவதற்கு போதுமான திரையரங்குகளும் கிடைக்காததால் பல இடங்களில் திரையிட முடியவில்லை. பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கிணங்கவும், திரையரங்குகளின் மேலான  ஒத்துழைப்போடும், இத்திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 12ம் தேதி, 75 திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்படுகிறது....
உறியடி-2 உங்களை என்டர்டைன்மென்ட் பண்ணாது.ஆனால் டிஸ்டர்ப் செய்யும். யோசிக்கவைக்கும்” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

உறியடி-2 உங்களை என்டர்டைன்மென்ட் பண்ணாது.ஆனால் டிஸ்டர்ப் செய்யும். யோசிக்கவைக்கும்” என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

News
  2 டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா தயாரிப்பில், சாவனீர் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கும் ‘உறியடி 2’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் சத்யம் திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் சூர்யா, உறியடி 2 படத்தின் இயக்குனர் விஜயகுமார், படத்தின் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார், படத்தொகுப்பாளர் பினு, படத்தின் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, நடிகர்கள் ராஜ் பிரகாஷ், சங்கர்தாஸ், பாடலாசிரியர் நாகராஜி, இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், விநியோகஸ்தர் சக்தி வேலன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்தவர்களை இணை தயாரிப்பாளர் ராஜசேகர்  கற்பூரசுந்தரபாண்டியன் வரவேற்றார். அவர் பேசுகையில்,“ உறியடி 2 எங்களுக்கு ஸ்பெஷலான படம். உறியடி படத்தின் இயக்குனர் விஜயகுமார் அவர்கள் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் சொன்ன ஒன்...
ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்  “கீ” 

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்  “கீ” 

News
"கீ "திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!  நாடோடிகள் , ஈட்டி  ,மிருதன் , போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தயாரித்துள்ள  வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா  , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுகாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் .இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர் ஆவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.படத்தொகுப்பு நகூரன் . பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் ஜீவா பேசியவை : வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்...
நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

நல்ல தலைப்பு வேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் கவிப்பேரரசு வைரமுத்து பேச்சு

News
"அதிர்ஷ்டம் என்பது உழைப்பின் விளைச்சல்" என்று எழுதி இருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. அப்படியான உழைப்பின் விளைச்சலாகத் தான் நெடுநல்வாடை படத்தின் வெற்றியைப் பார்க்க வேண்டிய இருக்கிறது. சென்றவாரம் செல்வகண்ணன் இயக்கத்தில் வெளியான நெடுநல்வாடை படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவும், ரசிகர்களிடம் படத்தைக் கொண்டுசேர்த்த பத்திரிகையாளர்களும் தான் பெருங்காரணம். அப்படியான ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி அறிவிக்கும் விழாவை நேற்று நெடுநல்வாடை படக்குழு நடத்தியது. விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து, இயக்குநர் செல்வகண்ணன், படத்தின் கதாநாயகன் அலெக்ஸ், நாயகி அஞ்சலிநாயர், ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி, படத்தொகுப்பாளர் மூ.காசிவிஸ்வநாதன், இசை அமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின், படத்தை தமிழகமெங்கும் வெளியீட்ட எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், ஜேம்ஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். படத்தி...
நயன்தாராவின் ‘ஐரா’.. பத்திரிக்கையாளர் சந்திப்பு!

நயன்தாராவின் ‘ஐரா’.. பத்திரிக்கையாளர் சந்திப்பு!

News
  கேஜேஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே ராஜேஷ் தயாரிக்க, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் 'ஐரா'. கலையரசன், யோகிபாபு ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க, சர்ஜூன் கே.எம் இயக்கியிருக்கிறார். கேஎஸ் சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கும் இந்த படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார். மார்ச் 28ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமைய...