News

பெண்களுக்காக ஐயப்பன் கோயில் கட்டுவேன்..; கடமான் பாறை இசை விழாவில் சீமான் ஆவேசம்

பெண்களுக்காக ஐயப்பன் கோயில் கட்டுவேன்..; கடமான் பாறை இசை விழாவில் சீமான் ஆவேசம்

News
மன்சூரலிகான் தனது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பாக எழுதி இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு “கடமான்பாறை“ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் இளம் கதாநாயகனாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். இந்த படத்தில் மன்சூரலிகான் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது…. மன்சூரலிகானின் மகன் துக்ளக் இப்படத்தில் அறிமுகமாகிறார். அவர் சிறந்த நடிகராக உயர வேண்டும். சபரிமலையில் பெண்களை அனுமதிக்கவில்லை. அது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளது. கேட்டால் தீட்டு என்கிறார்கள். மற்ற கோயில்களில் மட்டும் பெண்களை அனுமதிக்கிறார்கள். அங்கு தீட்டு இல்லையா?, அதை கேட்டால் ஐயப்பன் பிரம்மசாரி என்கிறார்கள். அப்படியென்றால் ஹனுமன் மற்று...
மதுரை தியேட்டரில் போலீஸிடம் அடி வாங்கினேன் – இசையமைப்பாளர் சாம் சி எஸ்!

மதுரை தியேட்டரில் போலீஸிடம் அடி வாங்கினேன் – இசையமைப்பாளர் சாம் சி எஸ்!

News
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்த படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிப்பில், சாம் சி எஸ் இசையில் அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருந்தார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் கிருஸ்துமஸ் வெளியீடாக டிசம்பர் 21ஆம் தேதி வெளியிட்ட இந்த படம் பல போட்டிகளையும் தாண்டி பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவிடம் பேசிக் கொண்டிருந்தபோது ரவி இந்த அளவு மகிழ்ச்சியாக இருந்து நானும், அப்பாவும் பார்த்ததில்லை என்றார். அவர் தேர்ந்தெடுத்து நடித்த படம் என்பதும் இந்த மகிழ்ச்சிக்கு காரணம். அடங்க மறுவுடன் வெளியான மற்ற படங்களும் வெற்றி பெறணும் என எந்த பொறாமையும் இல்லாமல் இருந்த இந்த குழுவினரின் மனசு தான் இந்த பெரிய வெற்றிக்கு காரண...
அமேஸான், நெட்பிளிக்ஸால் சின்ன படங்களுக்கு ஏற்பட போகும் அபாயம் ; ஆரி எச்சரிக்கை!

அமேஸான், நெட்பிளிக்ஸால் சின்ன படங்களுக்கு ஏற்பட போகும் அபாயம் ; ஆரி எச்சரிக்கை!

News
'ஸரோமி மூவி கார்லேண்டு' நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம...
23 நாட்களில் படமான “ என் காதலி சீன் போடுறா “!

23 நாட்களில் படமான “ என் காதலி சீன் போடுறா “!

News
சங்கர் மூவீஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலிஅம்மா,அம்பானிசங்கர், தியா, தென்னவன்,வையாபுரி, ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி.கோகுல் நடித்துள்ளார் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார். ஒளிப்பதிவு - வெங்கட் இசை - அம்ரிஷ் பாடல்...
சீதக்காதியில் என்னுடைய கேரக்டர் பேசப்படும் – அர்ச்சனா

சீதக்காதியில் என்னுடைய கேரக்டர் பேசப்படும் – அர்ச்சனா

News
படத்தின் நாயக கதாபாத்திரங்கள் எப்போதும் நேர்மையான நபர்களாக சித்தரிக்கப்படும் என்ற ஒரு குறிப்பிட்ட விஷயம் உண்டு. அவர்கள் திரையில் ஆதிக்கம் செலுத்தும் போது, உண்மையில் நாம் கவனிக்க வேண்டியது அவர்களின் மனைவிமார்களை தான். அவர்கள் பேசுவதற்கு அதிக வார்த்தைகளே இருக்காது, ஆனால் அவர்களது மௌனத்தில் இருக்கும் அவர்களின் துன்பங்களை உணர முடியும். இந்த குணங்களை நீங்கள் ஒரு பிரபல நாடக கலைஞர் அய்யாவின் மனைவி லக்‌ஷ்மியிடம் காணலாம். பிரபல நடிகை அர்ச்சனா அந்த லக்‌ஷ்மி கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். "நீங்கள் பொருள் தேடி ஓடாத, கலைஞர் ஒருவரின் ஆன்மாவாக இருக்கையில், அது ஒரு தவிர்க்க முடியாத சூழ்நிலை. இது தியாகம் என்று சொல்ல முடியாது, ஆனால் கலையை நேசிக்கும், சுவாசிக்கும் ஒருவரின் துணையாக, பக்க பலமாக இருக்கும் ஒரு பொறுப்பு. நான் அப்படிப்பட்ட உணர்ச்சிகளுக்குள் கட்டுண்டு கிடப்பது ...
யதார்த்தமான படைப்பாக உருவாகியுள்ளது ‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷ்!

யதார்த்தமான படைப்பாக உருவாகியுள்ளது ‘கனா’ – ஐஸ்வர்யா ராஜேஷ்!

News
சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கும் படம் 'கனா'. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் ஆகியோர்  நடிக்க திபு நினன் தாமஸ் இசையமைத்திருக்கிறார். வரும் டிசம்பர் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கனா எங்கள் பேனரில் நண்பர்கள் சேர்ந்து தயாரிக்கும் முதல் படம். எந்த ஒரு படத்தையும் பட்ஜெட்டில் எடுத்தால் தான் அது தயாரிப்பாளருக்கு சரியாக அமையும். இந்த படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ், எங்களுக்கு கிடைத்த வரம். சின்ன படமாக இருந்த இந்த கனா, சத்யராஜ் சார் நடிக்க உள்ளே வந்தவுடன் பெரிய படமாகி விட்டது. சத்யராஜ் சாரை எல்லோரும் கட்டப்பா என்று தான் அழைக்கிறார்கள். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு முருகேசன் என்று எல்லோரும் அழைப்பார்கள் என நம்புகிறேன். விளையாட்டே தெரியாமல் ஒரு கிரிக்கெட் வீராங்கணையாக ஐஸ்வர்யா ர...
ஜெயம் ரவியின் ”அடங்க மறு” ரகசியம்!

ஜெயம் ரவியின் ”அடங்க மறு” ரகசியம்!

News
ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் மிக பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம் 'அடங்க மறு'. ஜெயம் ரவி, ராஷி கண்ணா நடிக்க, இசை சென்சேஷன் சாம் சி எஸ் இசையமைக்க, அறிமுக இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கியிருக்கிறார். கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வெளியிட, கிருஸ்துமஸ் வெளியீடாக வரும் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கடந்த 6 வருடமாக, 4 படங்களில் தொடர்ந்து ஜெயம் ரவியுடன் நடித்து வருகிறேன். அவர் ஒரு இயக்குனர்களின் நடிகர், தன்னை முழுமையாக ஒப்படைத்து விடுபவர். ஒரு இயக்குனர் தான் நினைத்த விஷயங்களை மிகச்சரியாக திரையில் கொண்டு வருவது ஒரு சிறந்த ஆளுமை. கார்த்தியை பற்றி நான் நினைத்ததை சரி என திரையில் நிரூபித்திருக்கிறார் என்றார் நடிகர் பொன்வண்ணன். இயக்குனர் கார்த்திக் எனக்கு 10 வருடமாக பழக்கம். சரண், அமீர், மிஷ்கின் ஆகியோரிடம...
‘உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்

‘உன் காதல் இருந்தால்’ படத்தின் கதையை யாராலும் யூகிக்க முடியாது – ஹாசிம் மரிகர்

News
லெனா (நடிகை) ஹாசிம் எனக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது. நான்கு வித்தியாசமான பாத்திரமாக இருக்கும். அதிலும் புகைபிடிக்கும் காட்சிகள் கடினமாக இருந்தது. இருப்பினும், என்னுடைய கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். நான் தற்போது விக்ரமுடன் 'கடாரம் கொண்டான்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கி றேன். மபுள் சல்மான் (மற்றொரு கதாநாயகன்) தமிழ் கொஞ்சம் தான் தெரியும். மலையாளத்தில் 15 படங்கள் நடித்திருக்கிறேன். தமிழ் படங்கள் நிறைய பார்ப்பேன். எனக்கும் என் பெரியப்பா மம்முட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மாதிரி தமிழ் படத்தில் நடிக்க ஆவலாக இருந்தேன். அப்போது தான் ஆசிப் இந்த வாய்ப்பை கொடுத்தார். தமிழில் முதல் படம். எல்லோருக்கும் பிடிச்ச மாதிரி நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். சந்திரிகா (கதாநாயகி) இது எனக்கு மூன்றாவது படம். ஆனால் கதாநாயகியாக நடித...
நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா!

நம் மண்ணையும் பாரம்பரியத்தையும் காக்க போராடவேண்டும் – பெட்டிக்கடை இசை வெளியிட்டு விழாவில் பாரதிராஜா!

News
லஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு " பெட்டிக்கடை " என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி கதாநாயகனாக நடிக்கிறார். சமுத்திர பாண்டி என்கிற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட வாத்தியாராக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக மொசக்குட்டி வீரா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக வர்ஷா நடிக்கிறார் கதா நாயகியாக சாந்தினி நடிக்கிறார். இன்னொரு ஜோடியாக சுந்தர் அஸ்மிதா நடிக்கிறார்கள். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன்,ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், செந்தி ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திர நாத்,ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - அருள், சீனிவாஸ் இசை - மரியா மனோகர் பாடல்கள் - நா.முத்துக்குமார்,சினேகன், இசக்கிகார்வண்ணன், மறத்தமிழ் வேந்தன் நடனம் - வின்செண்ட் ,விமல் ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல் எடிட்டிங் - சுரேஷ் அர்ஸ் கலை - முருகன் ...
சுரேஷ் சந்திரமேனனின் ‘மை கர்மா’!

சுரேஷ் சந்திரமேனனின் ‘மை கர்மா’!

News
இயக்குனர் மற்றும் நடிகர் சுரேஷ் சந்திர மேனன் My Karma App என்ற க்விஸ் அப்ளிகேஷனை உருவாக்கியிருக்கிறா. அதனை பற்றிய அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சுரேஷ் சந்திர மேனன் கலந்து கொண்டு ஆப்பை அறிமுகப்படுத்தி, விளக்கினார். அவர் பேசும்போது, "என்னை ஒரு ஒளிப்பதிவாளராக, இயக்குனராக, நடிகராக  பார்த்திருப்பீர்கள். 40 வருடமாக இந்த துறையில் இருந்து வருகிறேன். சினிமா இயக்கியிருக்கிறேன், டிவி சீரியல்கள், பல்வேறு டாகுமெண்டரிகள் எடுத்திருக்கிறேன். தற்போது லூசிஃபர், அடங்க மறு, காளிதாஸ், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். நடிப்பதை தாண்டி பல்வேறு சமூக வளர்ச்சி திட்டங்களை செய்ல்படுத்துவதில் ஆர்வம் உண்டு. மக்கள் பயன்பெறும் நிறைய திட்டங்களை வடிவமைத்து தந்திருக்கிறேன். கண்டெய்னர் மூலம் பெண்களுக்கு கழிப்பிடம் கட்டி கொடுத்திருக்கிறேன். சென்னை காவல்துறைக்கு பல ட்ராஃபிக் கண்ட...