“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை தொகுப்பு வெளியீடு
“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை தொகுப்பு வெளியீடு
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ராஜா இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடிப்பில், ஜிவி பிரகாஷ்குமார், ஐக்கி பெர்ரி குரல்களில் ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம் உருவாகியுள்ளது. இந்நிகழ்வில் நடிகர் பலராம் ஜெ பாலாஜி பேசும்போது, “கல்லூரி படிக்கும் போது இருந்தே சினிமா துறை மீது எனக்கு ஆர்வம் இருந்தது. அப்பாவும் எனக்கு ஆதரவு கொடுப்பதாக சொன்னார். ஆனால் 2014 இல் அவரது எதிர்பாராத மறைவு காரணமாக குடும்ப தொழிலான ஜுவல்லரி கடை வியாபாரம் எடுத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். சில வருடங்கள் கழித்து நமக்கு பிடித்ததை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தது. திரைத்துறையில் வாய்ப்புகள் தேட ஆரம்பித்தேன். சின்ன சின்ன காணொளிகள் செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது நண்பர்கள்தான் உனக்கு என ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என உத்வேகம் கொடுத்தார்கள். என்னுடைய...









