ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !
*ஹைக்கூ’ படக்குழுவுடன் மூன்றாவது முறையாக இணையும் முன்னணி விநியோக நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி !*
தமிழ் சினிமாவில் காதல் கதைகள் எப்போதுமே ஸ்பெஷல். ‘மௌன ராகம்’, ‘அலைபாயுதே’, ‘மின்னலே’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’ என பல்வேறு காலகட்டங்களில் வெளியான காதல் திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அந்த வரிசையில், புதிய தலைமுறைக்கான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் தமிழ் திரையரங்க விநியோகத்தினை முன்னணியில் உள்ள சக்தி ஃபிலிம் ஃபேக்டரி கைப்பற்றியுள்ளது. ‘ஹைக்கூ’ படக்குழுவுடன் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி இணையும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் இடையில் உள்ள பரஸ்பர நம்பிக்கையையும் இது காட்டுகிறது.
திரையரங்க விநியோகத்தில் முன்னணி நிறுவனமான சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வணிக ரீதியாக நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து ...









